மீண்டும் இணையும் சூது கவ்வும் காம்போ.. நலன் மற்றும் மக்கள் செல்வன் பராக் - தயாரிப்பாளர் தந்த செம அப்டேட்!
VijaySethupathi : பீட்சா திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனான மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்த மற்றொரு படம் தான் சூது கவ்வும். பிரபல இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான படம் அது.
Pizza movie
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, தனக்கு கொடுக்கப்படும் எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதை நேர்த்தியாக செய்யக்கூடிய ஒரு அற்புத நடிகர். அந்த வகையில் அவர் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சூது கவ்வும். பிரபல இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இயக்கத்தில் இந்த படம் வெளியானது.
மன்சூர் மட்டுமல்ல.. கூல் சுரேஷ் முதல் ரோபோ சங்கர் வரை.. நடிகைகளை கொச்சையாக பேசிய திரை பிரபலங்கள்
Soodhu Kavvum
இன்றளவும் அந்த படத்தின் கதையும், பின்னணி இசையும், மக்கள் செல்வனின் effortless நடிப்பும பலரை வெகுவாக கவர்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. 2013ம் ஆண்டு வெளியான அந்த படத்தை ஸ்டுடியோ கிறீன் நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரித்து வெளியிட்டார். இந்நிலையில் அந்த சூது கவ்வும் காம்போ மீண்டும் அமையவுள்ளது.
Nalan Kumarasamy
மூன்றாவது முறையாக மக்கள் செல்வன் மற்றும் இயக்குனர் நலன் குமாரசாமி ஆகிய இருவரும் இணையவுள்ளனர். இந்த தகவலை ஸ்டுடியோ கிறீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார். ஏற்கனவே இவர் சூர்யாவின் கங்குவா படத்தை தயாரித்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆகவே மக்கள் செல்வனின் இந்த படத்தையும் இவர் தான் தயாரித்து வெளியிடவுள்ளார்.
Nalan Kumarasamy and VJ
இந்த பட பணிகளை, கார்த்தியின் வா வாத்தியாரே பட பணிகளை முடித்த பிறகு துவங்குவர் நலன் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மூன்று முக்கிய நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்.