எந்நேரமும் சித்தி கிட்ட சண்டை போட்டுகிட்டே இருக்கே.. சித்தப்பாவை சல்லி சல்லியாக வெட்டிய மகன்கள்..!
கணவன் தொடர்ந்து மனைவியிடம் சண்டை போட்டு வந்ததை அடுத்து பெண்ணின் உறவினர்கள் ஆட்டோ ஓட்டுநரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடக்கோடு பகுதியை சேர்ந்தவர் கோதண்டம் (48). ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி ராதா (39). இவர்களுக்கு மனோஜ் மற்றும் தீபக் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கோதண்டம் ராதா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அதேபோல் நேற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று ராதாவின் அக்காள் மகன்களான ஜஸ்வந்த் (30) கோகுல் (28) ஆகிய இருவரும் கடைக்கோடு பெஸ்ட் பப்ளிக் பள்ளி எதிரே கோதண்டம் ஆட்டோ ஓட்டி வந்துகொண்டிருந்தது. அப்போது ஜஸ்வந்த் மற்றும் கோகுல் கோதண்டத்தின் ஆட்டோ மீது காரை மோதியுள்ளார். ஆட்டோ மற்றும் கார் சாலையில் கவிழ்ந்தது.
பின்னர் காரில் இருந்து வெளியே வந்த ஜஸ்வந்த் மற்றும் கோகுல் கோதண்டத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் கோதண்டம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோதண்டம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜஸ்வந்த் மற்றும் கோகுல் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.