Asianet News TamilAsianet News Tamil

கத்திரி வெயிலுக்கு மத்தியில் வைகையில் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரையில் வசிக்கக் கூடிய கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

flood alert to public who live at the vaigai river shore areas in madurai vel
Author
First Published May 11, 2024, 8:06 PM IST | Last Updated May 11, 2024, 8:06 PM IST

இராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்றாம் பூர்வீக பாசன தேவைக்காக வைகை அணையில் இருந்து நேற்று முதல் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாநகர் வைகையாற்று பகுதிக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனத்திற்கு எதிராக கிளர்ச்சி; நூற்றுக்கணக்கான விவசாயி கூலி தொழிலாளர்கள் கைது - நாகையில் பரபரப்பு

வைகை அணையில் உள்ள 7 சிறிய மதகுகள் வழியாக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மதுரை மாவட்டம் மற்றும் தேனி மாவட்டத்தில் 3 நாட்களாக மழை பெய்து வருவதால் வரக்கூடிய மழை நீரும், வைகை ஆற்றில் கலந்து நீரின் வேகம் அதிகரிக்கும் என்பதால் மதுரை மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது.

நாகூர், வேளாங்கண்ணில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்த மனித கடவுள்

ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கும், குளிக்கவும், துணி துவைக்கவும் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளையும் ஆற்றிற்குள் இறங்க அனுமதிக்க கூடாது அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிப்பால் யானைக்கல் தரைப்பாலம் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்திற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். வரும் 14 ஆம் தேதி வரை தேதி வரை மொத்தம் 915 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios