Asianet News TamilAsianet News Tamil

நாகூர், வேளாங்கண்ணில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்த மனித கடவுள்

உலகப் புகழ்பெற்ற நாகூர்தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் பகுதிகளில் சுற்றித்திரிந்த 50-க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு முடி திருத்தம் செய்து புதிய உடை அணிவித்து காப்பகத்தில் ஒப்படைத்து மறுவாழ்வு அளித்த தன்னார்வலருக்கு குவியும் பாராட்டுக்கள்.

people encouraging the volunteer who help mentally challenged person in nagapattinam vel
Author
First Published May 11, 2024, 3:56 PM IST | Last Updated May 11, 2024, 3:56 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பாரதிமோகன் என்ற தன்னார்வலர் பாரதிமோகன் அறக்கட்டளை என்ற பெயரில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில்  10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரம் ஆதரவின்றி திரியும் ஆதரவற்ற இளைஞர்கள், முதியவர்களுக்கு நாள் தோறும் உணவு வழங்கி வருகிறார்.

மேலும் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் திரியும் நபர்களை அழைத்து  முடி திருத்தம் செய்து குளிக்க வைத்து, உடை அணிவித்து சக மனிதனாக மாற்றி காப்பகத்தில் சேர்த்தும், உரியவர்கள் குடும்பத்தில் சேர்த்தும் வருகிறார். அதன்படி  நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நாகூர் தர்கா பகுதிகளில் சுற்றித் திரியும் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த 50க்கும் மேற்பட்டோருக்கு பாரதிமோகன் இலவசமாக முடிதிருத்தம், முகச்சவரம் செய்தார். 

மதுரையில் காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் நகை, ரூ.5 லட்சம் திருட்டு; போலீசார் அதிர்ச்சி

தொடர்ந்து அவர்களை குளிக்க வைத்து, புத்தாடை மற்றும் உணவு வழங்கி அவர்களை உரிய காப்பகத்தில் ஒப்படைத்தார். சாலைகளில் இவர்கள் நடமாடுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த நிலையில் 50க்கும் மேற்பட்டோரை மீட்டு  காப்பகத்தில் ஒப்படைத்து மறுவாழ்வு அளித்த தன்னார்வலர் பாரதி மோகனுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுதலை தெரிவித்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios