- Home
- Gallery
- Vani Ganapathy: கமல்ஹாசனின் முன்னாள் மனைவி வாணிகணபதி 73 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்கள்? வைரல் போட்டோ!
Vani Ganapathy: கமல்ஹாசனின் முன்னாள் மனைவி வாணிகணபதி 73 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்கள்? வைரல் போட்டோ!
உலக நாயகன் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி வாணி கணபதி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Kamal Haasan, Vani Ganapathy
வாணி கணபதி ஒரு பரதநாட்டிய கலைஞர் ஆவார். இவரின் உண்மையான பெயர் வாணி பாரதி, தஞ்சாவூரில் ஒரு வைதீக பிராமண குடும்பத்தில் கணபதி ஐயர்–இந்துமாலா தம்பதியதற்கு மூத்த மகளாக பிறந்தார். இவருக்கு மீரா என்ற தங்கை ஒருவரும் உள்ளார். வாணி டி. ஏ. ராஜலட்சுமியிடம், கல்கத்தாவில் தன்னுடைய மூன்று வயதில் நடன பயிற்சியை துவங்கினார்.
பின்னர் தன்னுடைய சிறு வயதிலேயே பம்பாய் சென்றார். அங்கு தன்னுடைய கல்வியை பயின்றது மட்டும் இன்றி நடன பயிற்சியை விடாமல் மேற்கொண்டார். படிக்குது கொண்டிருக்கும் போதே, பல்வேறு மேடை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினார்.
Kamal Haasan, Vani Ganapathy
அதே போல் நடனத்திற்காக உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளார் வாணி பாரதி. பல வருடங்களாக பெங்களூரில் சஞ்சாரி என்ற நடனப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
Kamal Haasan, Vani Ganapathy
1973-ஆம் ஆண்டு, ஹிந்தியில் Pyaasi Nadi என்கிற படத்தில் அறிமுகமான வாணி கணபதி, பின்னர்... அந்தீரா என்கிற பாலிவுட் படம் ஒன்றிலும் நடித்தார். இதை தொடர்ந்து 1975-ஆம் ஆண்டு தமிழில் இயக்குனர் AP நாகராஜ் இயக்கத்தில் உருவான, 'மேல்நாட்டு மருமகள் ' படத்தில் கமல்ஹாசனுடன் நடித்தார். இந்த படத்தில் நடித்த போது, கமல்ஹாசனுக்கும், வாணிகணபதிக்கும் ஏற்பட்ட நெருக்கம் காதலாக மாறியது.
Kalvan OTT Release: ஜிவி பிரகாஷ் நடித்துள்ள 'கள்வன்' படத்தின் OTT ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!
வாணி கணபதி தன்னை விட 4 வயது மூத்தவராக இருந்த போதும் அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை 10 வருடத்தில் முடிவுக்கு வந்தது. குழந்தை இல்லாத காரணத்தாலேயே இருவரும் விவாகரத்து பெற்றதாக கூறப்பட்டது. வாணியை விவாகரத்து செய்த கையோடு சரிகாவை திருமணம் செய்து கொண்டார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட, வாணி கணபதியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. தன்னுடைய 73 வயதிலும் அழகு குறையாமல் ஃபிட்னசுடன் உள்ளார் வாணி கணபதி.
Vairamuthu: கலைஞர் அன்று தன்னை பற்றி சொன்னதை கூறி... மறைமுகமாக இளையராஜாவை தாக்கிய வைரமுத்து!
வாணி கணபதி, டான்சர் என்பதை தாண்டி திரையுலகினர் அனைவராலும் அதிகம் நேசிக்கப்படும் பிரபலமாக உள்ளார். காரணம், தன்னுடைய நடன பள்ளி மூலம் கிடைக்கும் வருவாயில் பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வருகிறார். நடனம் கற்க ஆர்வம் உள்ளவர்களுக்கு தொடர்ந்து தன்னுடைய நடன பள்ளி மூலம் இலவசமாக பயிற்சி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.