- Home
- Gallery
- Janhvi Kapoor: இது தான் உங்க ஃபேவரட் நம்பரா? கைக்குட்டை போன்ற டாப் அணிந்து... செல்லத்துடன் விளையாடும் ஜான்வி!
Janhvi Kapoor: இது தான் உங்க ஃபேவரட் நம்பரா? கைக்குட்டை போன்ற டாப் அணிந்து... செல்லத்துடன் விளையாடும் ஜான்வி!
நடிகை ஜான்வி கபூர், தனக்கு ராசியான எண்ணின் நம்பர் பொறிக்கப்பட்ட உடையில்... அழகில் ரசிகர்களை மயக்கும் விதத்தில் எடுத்து கொண்ட போட்டோ ஷூட், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், தன்னுடைய அம்மா தேர்வு செய்த 'தடக்' என்கிற திரைப்படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.
இந்த படம் வெளியாகும் முன்பே, ஜான்வியின் அம்மாவான நடிகை ஸ்ரீதேவி துபாய்க்கு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது, மாரடைப்பு காரணமாக பாத் டப்பிலேயே உயிர் இழந்தார். பின்னர் 'தடக்' திரைப்படம் வெளியாகி, ஜான்வி கபூருக்கு பாலிவுட் திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
முதல் படத்தின் வெற்றியை தன்னுடைய தாய்க்கே சமர்ப்பிப்பதாக கூறிய ஜான்வி, நடிப்பில் தன்னுடைய அம்மாவின் இடத்தை பிடிக்கமுடியாது என்றாலும் ஒரு போதும் அவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த மாட்டேன் என கூறி, தொடர்ந்து முத்தான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் பாலிவுட் திரையுலகில் இவர் தேர்வு செய்து நடித்த 'குஞ்சன் சக்சேனா','ரோஹி', 'குட் லக் ஜெர்ரி ', 'மிலி', 'பவால்' போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
Nayanthara: இன்னொரு குழந்தை எங்கே? ஒற்றை குழந்தையோடு... கொச்சி ஏர்போர்ட்டுக்கு வந்த நயன்தாரா.!
அறிமுகமானத்தில் இருந்து பாலிவுட் திரையுலகில் மட்டுமே கவனம் செலுத்திய இவர், தற்போது தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில், Jr என்டிஆருக்கு ஜோடியாக தேவாரா என்கிற படத்திலும் ராம் சரணுக்கு ஜோடியாக இன்னும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார்.
நடிப்பு மட்டும் இன்றி, மாடலிங், ஃபிட்னஸ் என பலவற்றிலும் கவனம் செலுத்தி வரும் ஜான்வி.. தற்போது செம்ம ஸ்டைலிஷான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
இதில், ஜான்வி கைக்குட்டை அளவே உள்ள டாப்பை அணிந்துள்ளார். அதில் 6 என்கிற நம்பர் இடம்பெற்றுள்ளதால்... இது தான் உங்களின் ராசியான நம்பரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதில் தன்னுடைய செல்லப்பிராணியுடன் விளையாடி சில வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.