நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து, இளையராஜா பற்றி பேசிய விவகாரம் பூதாகரமாக வெடித்துக்கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து மறைமுகமாக தாக்கி பதிவு ஒன்றை போட்டுள்ளார் வைரமுத்து. 

இசைஞானி இளையராஜா இசையில், கடந்த 1980வது ஆண்டு வெளியான 'நிழல்கள்' படத்தின் மூலம் பாடலாசிரியராக திரையுலகில் நுழைந்தவர் தான் வைரமுத்து. இவருக்கு இந்த வாய்ப்பை வழங்கியவரும் இளையராஜா தான். இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது. குறிப்பிற்காக இப்படத்தில் இடம்பெற்ற 'இது ஒரு பொன் மாலை பொழுது' என்கின்ற பாடலின் வரிகள் மூலம் வைரமுத்துவும் அதிகம் பேசப்பட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பின்னர் அடுத்தடுத்து இளையராஜா தான் இசையமைக்கும் படங்களில் வைரமுத்துவுக்கும் வாய்ப்பு கொடுக்க துவங்கினார். 3 வருடத்தில் முன்னணி பாடலாசிரியராக உயர்ந்த வைரமுத்து இதுவரை ஏகப்பட்ட தமிழ் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவரின் பாடல் வரிகள் அடங்கிய தொகுப்புகள் புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளன.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியால் சரியா படிக்க முடியல! பெற்றோர் ஆசை நிறைவேறவில்லை.. ஹர்ஷினி 10th மார்க் இது தான்!

இந்நிலையில், அண்மையில் 'படிக்காத பக்கங்கள்' என்கின்ற ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வைரமுத்து, "இசை பெரிதா.. மொழி பெரிதா என்பது இப்பொழுது பெரிய விவாதமாக மாறி உள்ளது. இதில் என்ன சந்தேகம் இசை எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரியது மொழி. மொழி எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது இசை. இதை புரிந்து கொண்டவர்கள் ஞானி, புரிந்துகொள்ளாதவர்கள் அந்நியானி என்று பேசி இருந்தார்". 

இளையராஜாவை சாடி பேசிய வைரமுத்துவுக்கு எதிராக, ரசிகர்கள் சிலர் தங்களின் கண்டனத்தை தெரிவிக்க, இளையராஜாவின் சகோதரர் கங்கையமரனும் அறிக்கை வெளியிட்டு தன்னுடைய எதிர்ப்பைதெரிவித்தார் .

King Kong: 52 வயதில்... ஆசைக்காக காது குத்தி கிடா விருந்து வைக்கும் நடிகர்! காமெடி நடிகரின் அட்ராசிட்டி..!

இந்த விஷயம் தற்போது விவாத பொருளாக மாறியுள்ள நிலையில், சமூக வலைத்தளத்தில் கலைஞர் கருணாநிதி அவர்கள் கூறிய தன்னை பற்றி கூறிய வார்த்தையை பதிவிட்டு, மறைமுகமாக இளையராஜாவை சாடி உள்ளதாக தெரிகிறது. இந்த பதிவில் கூறி உள்ளதாவது, "கலைஞருக்கும்,
அ.இ.அ.தி.முகவிலிருந்து
தி.மு.கவில் வந்துசேர்ந்த
ஒரு முக்கியப் புள்ளிக்கும்
நடந்த உரையாடல்

எனக்கு
வாய்மொழியாக வந்தது;
தயக்கத்தோடு 
கலைஞரையே கேட்டு
உறுதி செய்தது

சொற்கள் மாறியிருக்கலாம்;
சொன்னபொருள் இதுதான்

‘வைரமுத்த
ரொம்ப நம்பாதீங்க தலைவரே!’

‘ஏன்? எதனால?’

‘அவரு உங்களப்
புகழ்ந்து பேசுறாரே தவிர
ஜெயலலிதாவ எப்பவும்
திட்ட மாட்டேங்குறாரு’

(கலைஞர்
சிறு சிந்தனைக்குப் பிறகு)

‘நீ அங்க இருந்து
இங்க வந்திருக்க
அங்க இருந்தபோது
என்னத் திட்டுன;
இங்க இருந்து
அந்த அம்மாவத் திட்டுற

வைரமுத்து
எப்பவும் இடம் மாறல
ஜெயலலிதா வைரமுத்துக்கு
எதிரியும் இல்ல

அவரு தமிழுக்காக
நம்மகூட நிக்கிறாரு

இன்னொண்ணு
அவரு யாரையும் திட்டமாட்டாரு;
அது அவரு இயல்பு’

கோள் சொன்னவர்
குறுகிப்போனார்

இப்படித்தான்
கேடுகள்
ஈட்டி எறியும்போதெல்லாம்
கேடயமாவது சத்தியம். என பதிவிட்டுள்ளார்.


Scroll to load tweet…