MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 40 வருட திரையுலக பயணம்! இறப்பதற்கு முன்பே சொத்துக்களை எழுதிய கணவர்.! மீனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

40 வருட திரையுலக பயணம்! இறப்பதற்கு முன்பே சொத்துக்களை எழுதிய கணவர்.! மீனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோயினாகவும், தற்போது குணச்சித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை மீனாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Sep 07 2023, 04:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் மீனா. குறிப்பாக கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார், விஜயகாந்த், அர்ஜுன், கார்த்திக், உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.
 

27

தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிப்பது மிஸ் ஆகி இருந்தாலும், ஷாஜகான் படத்தில் விஜய்யுடன் 'சரக்கு வச்சிருக்கேன்' என்கிற பாடலுக்கு அசத்தலான ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தார். மீனா 30 வயதை கடந்த பின்னர், சினிமா வாய்ப்புகள் குறைய துவங்கியது. எனவே... சிலகாலம் டிவி சீரியல்களில் நடித்து வந்த இவர், திரைப்படங்களிலும் அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் அளவுக்கு தள்ளப்பட்டார்.

Jawan Leaked: அட கடவுளே... 'ஜவான்' படத்திற்கு வந்த சோதனை! அதிர்ச்சியில் இயக்குனர் அட்லீ மற்றும் ஷாருகான்!

37

பின்னர் கடந்த 2009-ம் ஆண்டு, பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் இஞ்சினியரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு 
பிறகு சில காலம் தன்னுடைய மகள் நைனிகா பிறந்த போது நடிக்காமல் இருந்த மீனா, பின்னர் வழக்கம் போல் நடிக்க துவங்கினார். குறிப்பாக மலையாளத்தில் மோகன் லால், மாமூட்டி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

47

திருமணத்திற்கு பிறகு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த மீனா வாழ்க்கையில் கடந்த ஆண்டு யாருமே எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் நடந்தது. புறாக்களின் எச்சத்தால், ஏற்படும் பாதிப்பு காரணமாக மீனாவின் கணவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

எல்லாம் என்னுடையது! மூக்கோடு மூக்கு ஒட்டியபடி... குறுகுறு பார்வையால் விக்கியுடன் ரொமான்ஸ் செய்யும் நயன்தாரா!

57

இந்த சம்பவத்துக்கு பின்னர் மீனா மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு வீட்டிற்குள்ளேயே முடங்கினார். ஆனால் மீனா அம்மாவின் அரவணைப்பு, மகள் நைனிகாவின் அன்பு, மற்றும் தோழிகள் கொடுத்த ஊக்கம் மிக விரைவாகவே மீனாவை அந்த சோகத்தில் இருந்து மீட்டு கொண்டு வந்தது. சிறு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் மலையாள படம் ஒன்றில் மீனா நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

67

சிறுவதில் இருந்து சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடித்து வரும் நடிகை மீனாவின் சொத்து விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, மீனாவின் பேங்க் பேலன்ஸ் பல கோடி இருக்கிறதாம். பல இடங்களில் மீனாவுக்கு சொந்தமாக வீடுகளும் உள்ளது என கூறப்படுகிறது. அதே போல் சில சொகுசு கார்களையும் மீனா வைத்துள்ளார். விலை உயர்ந்த தங்கம், வைரம் போன்ற நகைகளை மீனா பிரியப்பட்டு அணிவாராம். எனவே இவரின் சொத்துக்கள் சுமார் 50 முதல் 60 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

KamalHaasan: Guts & Guns தோட்டாக்கள் சும்மா தெறிக்குதே.! KH 233 படத்திற்காக பயிற்சியில் ஈடுபட்ட கமல்ஹாசன்..!

77

இதை தவிர மீனாவின் கணவர் வித்யா சாகர் தான் இறப்பதற்கு முன்பே, சம்பாதித்து வாங்கிய சொத்துக்கள் மற்றும் வசதியான குடும்பத்தில் பிறந்ததால், தனக்கு வரவேண்டிய அதனை சொத்துக்களையும் மீனாவின் பெயருக்கு எழுதி வைத்து விட்டதாக கூறப்படுகிறது . இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ள நிலையில், எந்த அளவிற்கு இந்த தகவல் உண்மை என்பது தெரியவில்லை.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved