எல்லாம் என்னுடையது! மூக்கோடு மூக்கு ஒட்டியபடி... குறுகுறு பார்வையால் விக்கியுடன் ரொமான்ஸ் செய்யும் நயன்தாரா!
நயன் - விக்கி ஜோடி, ரொமான்ஸ் செய்யும் புதிய புகைப்படம் ஒன்றை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Nayanthara Instagram
நடிகை நயன்தாரா, சமீபத்தில் தான் சமூக வலைத்தளத்தில் இணைந்த நிலையில்.. அவ்வப்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, சில புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
Nayanthara Kids
அந்த வகையில் கடந்த வாரம் தன்னுடைய இரட்டை குழந்தைகளான உயிர் - உலகத்தின் முகத்தை முதல் முறையாக ரசிகர்களுக்கு காட்டினார். இந்த வீடியோ மற்றும் நயன் - விக்கி மகன்களின் புகைப்படம் படு வைரலாக பார்க்கப்பட்டது.
KamalHaasan: Guts & Guns தோட்டாக்கள் சும்மா தெறிக்குதே.! KH 233 படத்திற்காக பயிற்சியில் ஈடுபட்ட கமல்ஹாசன்..!
Nayanthara celebrate krishna jayanthi
இதை தொடர்ந்து, தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதில் நயனின் இரு குழந்தைகளும் கிஷ்ணர் வேடத்தில்.. நயன் வீட்டு பூஜை அறையை அலங்கரித்தனர். ரசிகர்களும் நயன் - விக்கி மகன்கள் லிட்டில் கிருஷ்ணனாக மாறி, மனதை கொள்ளை கொள்கிறார்கள் கமெண்ட் போட்டு தெரிவித்து வந்தனர்.
uyir and ulagam photos
மேலும் இந்த புகைப்படத்துடன் உயிர், உலகம் மற்றும் விக்கியை கொடுத்ததற்கு என்றென்றும் கடவுளுக்கு நன்றி என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் நயன்தாரா. இதை தொடர்ந்து, கணவர் விக்கியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் நயன்தாரா.
திருமணம் எப்போது? பிரபாஸ் பற்றி எழுபட்ட கேள்வி..! நடிகை அனுஷ்கா ஓப்பன் டாக்!
Nayanthara vignesh shivan romance
மஞ்சள் நிற மாடர்ன் உடையில்... மூக்கோடு மூக்கு இடித்து கொள்ளும் படி... குறுகுறு பார்வையால் கணவர் விக்கியை காதலால் வசியம் செய்துள்ளார் நயன்தாரா. இந்த புகைப்படத்தை வெளியிட்டு எல்லாம் என்னுடையது... எல்லோரையும் நேசிக்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் தாறுமாறாக பார்க்கப்பட்டு வருகிறது. நயன்தாரா இன்ஸ்டாவில் இணைந்து ஒரு வாரமே ஆகும் நிலையில், இதுவரை இவரை 3.3 மில்லியன் ஃபாலோவர்ஸ் பின்தொடர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.