KamalHaasan: Guts & Guns தோட்டாக்கள் சும்மா தெறிக்குதே.! KH 233 படத்திற்காக பயிற்சியில் ஈடுபட்ட கமல்ஹாசன்..!

உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள 233 வது படத்திற்கான.. கன் ஷூட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோவை, தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Kamalhaasan 233 movie gun shooting Training Begins video

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான 'சதுரங்க வேட்டை' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் எச்.வினோத். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த எச்.வினோத், இந்த படத்தை தொடர்ந்து இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று', 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' போன்ற படங்கள் இவருக்கான மதிப்பை கூட்டியது.

Kamalhaasan 233 movie gun shooting Training Begins video

அக்கா ஐஸ்வர்யாவை தொடர்ந்து... களத்தில் இறங்கிய தங்கை சௌந்தர்யா ரஜினிகாந்த்! துவங்கியது படப்பிடிப்பு ஹீரோ இவரா?

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் எச்.வினோத், தன்னுடைய அடுத்த படத்தை  உலக நாயகன் கமலஹாசனை வைத்து இயக்க உள்ளார். கமலஹாசனின் 233 வது படமாக உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்களுக்கு சற்று அதிகரித்துள்ளது என்றே கூறலாம். காரணம் கமலஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான 'விக்ரம்' படம் மாபெரும் ஹிட் அடித்ததோடு மட்டுமின்றி வசூலிலும் பெருத்த லாபத்தை பெற்றுக் கொடுத்தது என்பதால்.

Kamalhaasan 233 movie gun shooting Training Begins video

Nanaynthara House: போயஸ் தோட்டத்தில் உள்ள லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வீட்டை பார்த்திருக்கீங்களா?

KH 233- ஆவது படத்திற்கு முன்பாக கமலஹாசன், பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் 'கல்கி 2898 AD' படத்திலும், எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் எச் வினோதோடு கமலஹாசன் இணையும் 233-ஆவது படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கு முன்பாக இப்படத்தின் கன் சூட்டிங் பயிற்சியை கமலஹாசன் மேற்கொண்டுள்ளார். இந்த வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ட்ரைனிங் வீடியோவிலேயே ரசிகர்களை மிரள வைத்துள்ளார் கமல்ஹாசன், இந்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios