அக்கா ஐஸ்வர்யாவை தொடர்ந்து... களத்தில் இறங்கிய தங்கை சௌந்தர்யா ரஜினிகாந்த்! துவங்கியது படப்பிடிப்பு ஹீரோ இவரா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த், தயாரிக்கும் புதிய வெப் சீரிஸின் படபிடிப்பு துவங்கியுள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை அவரே தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஒரு முன்னணி நடிகர் என்றாலும்... இவருடைய இரண்டு மகள்களும் திரைப்பட இயக்குவதில் தான் ஆர்வம் காட்டினர். மூத்த மகளான, ஐஸ்வர்யா தற்போது தன்னுடைய தந்தையை சிறப்பு வேடத்தில் நடிக்க வைத்து, கிரிக்கெட் கதைக்களத்தில் உருவாகியுள்ள, 'லால் சலாம்' என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், தற்போது ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா தயாரிக்க உள்ள, வெப் சீரிஸின் படபிடிப்பு இன்று துவங்கியுள்ளது.
சரியா இன்னும் 100 நாள் தான் இருக்கு..! கேப்டன் மில்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு..!
அதாவது சொந்தர்யா ’கேங்க்ஸ் ’ என்ற வெப் தொடரை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். நெள ஆபிரகாம் என்பவர் இந்த வெப்தொடரை இயக்க உள்ளார். இந்த வெப் தொடரில், விரைவில் புது மாப்பிள்ளையாக மாற உள்ள, நடிகர் அசோக் செல்வன் தான் நடிக்க ஹீரோவாக நடிக்க உள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'போர் தொழில் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த வெப் தொடரின் பூஜை இன்று நடந்த நிலையில், பூஜை குறித்த புகைப்படங்களை செளந்தர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதில் நடிக்கும் ஹீரோ யார் என்கிற தகவல் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் மற்ற பிரபலங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திற்காக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
Nanaynthara House: போயஸ் தோட்டத்தில் உள்ள லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வீட்டை பார்த்திருக்கீங்களா?