- Home
- Gallery
- Ego கிடையாது.. இறுதி வரை அன்னதான பிரபு.. கர்ணனாய் வாழ்ந்த "கேப்டன்" - பலரும் கண்டிராத அவரின் Rare Pics!
Ego கிடையாது.. இறுதி வரை அன்னதான பிரபு.. கர்ணனாய் வாழ்ந்த "கேப்டன்" - பலரும் கண்டிராத அவரின் Rare Pics!
Captain Vijayakanth : மதுரையில் கடந்த 1952ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி பிறந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர் தான் விஜயகாந்த். கேப்டன் என்று மக்கள் அனைவரும் அன்போடு அழைக்கும் ஒரு மிகசிறந்த மனிதர்.

Captain
தமிழ் திரையுலகிற்கு மதுரை மண் தந்த கலைஞர்கள் பல, அதில் மிக முக்கியமான ஒரு மனிதர் தான் விஜயகாந்த். இவரின் நட்பு வட்டாரத்தை பொறுத்தவரை, "விஜி" என்றால் அனைவருக்கும் தனி பிரியம். 27 வயதில் சினிமா ஆசை முளைக்கிறது, உடனே பட்டணம் புறப்பட்ட விஜயகாந்திற்கு கடந்த 1979ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
Actor Vijayakanth
ஒரே வருடத்தில் நாயகனாகவும் வாய்ப்பு கிடைக்கிறது, "தூரத்து இடி முழக்கம்" என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். அன்று தொடங்கி அவருடைய கடைசி படம் வரை மிகசிறந்த நடிகராக மட்டுமல்லாமல், அதை தாண்டி ஒரு மாமனிதனாக, அன்னதான பிரபுவாக வாழ்ந்தார் விஜயகாந்த். தன் படத்தில் நடிக்கும், பணி செய்யும் அனைவருக்கும் ஒரே சாப்பாடு, அதுவும் உயர்தர சாப்பாடு என்ற ஒரு நிலையை முதன் முதலில் இந்திய சினிமாவில் அறிமுகம் செய்தது விஜயகாந்த் தான்.
Thalapathy Vijay
இன்று தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக உருவெடுத்துள்ள தளபதி விஜயை, திரையுலகிற்கு நாயகனாக அறிமுகம் செய்துவைத்ததில், அவர் தந்தை SACக்கு நிகரான பங்கு கேப்டனுக்கு உண்டு என்றால், அது மிகையல்ல. அந்த நன்றிக்கடனை கேப்டனின் இறுதிச்சடங்கில் கண்ணீர் மல்க வெளிப்படுத்தினார் தளபதி விஜய்.
vijay and vijayakanth
தன்னோடு பணியாற்றும் நடிகர்கள், சிரியவரோ, பெரியவரோ, எளியவரோ அல்லது பணக்காரரோ, கேப்டனின் அணுகுமுறை ஒன்று தான். சாப்டியா? என்று வாய் வார்த்தையில் மட்டும் கேட்காமல், நடிகர், நடிகைகள் முதல் பாக்ஸ் பாய் வரை அனைவரும் சாப்பிடங்களா என்று நேரில் சென்று கேட்டறிந்த ஒரு மனிதன் தான் விஜயகாந்த்.
Rajinikanth
திரையுலகில், யார் சொல்லுக்கும் சட்டென தலையசைக்காத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட, விஜி சொன்னால் சரியாக இருக்கும் என்று, அவரின் அன்பிற்கு அடிமையாய் பயணித்திருக்கிறார். விஜயகாந்த் அரசியலில் கால்பதித்தபோது, அவரை புகழ்ந்து, அவருக்காக பேசிய வெகு சில உச்ச நடிகர்களில் ரஜினியும் ஒருவர். கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை ஒரு கருப்பு மாதமாக மாற்றி, மண்ணை விட்டு மறைந்தார் விஜயகாந்த்.