- Home
- Gallery
- Year Ender 2023: நயன்தாராலாம் லிஸ்டுலையே இல்ல! 2023 கூகுளில் அதிகம் தேடப்பட்ட No.1 ஹீரோயின் யார் தெரியுமா?
Year Ender 2023: நயன்தாராலாம் லிஸ்டுலையே இல்ல! 2023 கூகுளில் அதிகம் தேடப்பட்ட No.1 ஹீரோயின் யார் தெரியுமா?
2023-ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட, நம்பர் 1 ஹீரோயின் யார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்கினால் மட்டும் ரசிகர்கள் மனதை கவர்ந்து விட முடியாது, ஒரு படம் நடிச்சாலும் சும்மா தரமா நடிக்கணும். அப்போது தான் அதிகம் தேடப்படும் நாயகியாக மாற முடியும் என்பதை இந்த ஆண்டு நடிகை த்ரிஷா நிரூபித்துள்ளார்.
Actress Trisha
நடிகை த்ரிஷா 'மௌனம் பேசியதே' படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி, இன்றுடன் 21 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதனை ஒரு பக்கம் த்ரிஷாவின் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், 2023-ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட நடிகை என்கிற அந்தஸ்தையும் இவர் தான் பெற்றுள்ளார்.
த்ரிஷா ஹீரோயினாக அறிமுகமானத்தில் இருந்து இன்று வரை... திரையுலகில் பல்வேறு ஏற்றம் இறக்கங்களை சந்தித்தவர். குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளாக ஒரு வெற்றி படத்தை கொடுக்க போராடி வந்த நிலையில், 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இந்த படத்தில் இவரின் மேக்அப், ட்ரெஸ்ஸிங், என அனைத்துமே ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது.
thrisha
இதை தொடர்ந்து 'கில்லி' படத்திற்கு பின் மீண்டும் விஜய்க்கு ஜோடியாக 'லியோ' படத்தில் இணைந்தார். தளபதி நாயகி என்றால் சொல்லவா வேண்டும்... இவரை பற்றிய தகவல்கள் கூகுளில் அதிகம் தேடப்பட்டது. இதை தொடர்ந்து அஜித்துக்கு ஜோடியாக 'விடாமுயற்சி' படத்திலும் இணைந்துள்ளார். அதே போல் சமீபத்தில் எழுந்த மன்சூர் அலிகான் பிரச்சனை தொடர்பாகவும் த்ரிஷா பற்றிய தகவல்கள் அதிகம் சமூக வலைத்தளத்தில் தேடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வீரப்பனின் முதல் கொலை! ரஜினிக்கு மட்டும் ஆதரவு ஏன்? விடை தரும் ‘கூச முனிசாமி வீரப்பன்’ ஆவணத் தொடர்!
எனவே இந்த ஆண்டு.. டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டும் இன்றி... சென்சேஷனல் நாயகியாக மாறியுள்ளார் திரிஷா. ரசிகர்களும் 2023-ஆம் ஆண்டு கூகுளில் த்ரிஷா பற்றி தான் அதிகம் தேடி உள்ளதாக டேட்டா கூறுகிறது. இரண்டாவது இடத்தில் 'காவாலா' பாடல் மூலம் பிரபலமான தமன்னா உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் நயன்தாரா முதல் இரண்டு இடத்தில் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D