வாரத்தின் இந்த 4 நாட்களில் தங்கம் வாங்குங்க.. அதிர்ஷ்டம் டபுளா கிடைக்குமாம்!
Best Days Of The Week To Buy Gold : ஜோதிட சாஸ்திரத்தின் படி தங்கம் வாங்க வாரத்தில் எந்த நாட்கள் உகந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் தங்கம் ஒரு ஆடம்பரமான உலோகம் ஆகும். மேலும் இது செல்வம் மற்றும் முதலீட்டின் பொருள் மட்டும் அல்ல அது கலாச்சாரம் மற்றும் மதம் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.
இந்து மதத்தில் தங்கம் மங்களகரமான உலோகமாகக் கருதப்படுகிறது. எனவே, அதை வாங்கும் போது சுப மற்றும் அசுப நாட்களை பார்த்து வாங்க வேண்டும். எனவே, அட்சய திருத்தியை போன்ற மங்களகரமான நாட்களில் தங்கம் வாங்கினால் தங்கம் பன்மடங்கு அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
அந்த வகையில், வாரத்தின் எந்த நாளில் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டத்தையும், துரதிஷ்டத்தையும் கொடுக்கும் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தங்கம் வாங்க நல்ல நாள்: வாரத்தின் நாட்களைப் பற்றி பேசினால் நீங்கள் திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கம் வாங்க உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் தங்கம் வாங்கினால் அவற்றின் முழு நன்மைகளும் கிடைக்கும்.
இதையும் படிங்க: அட்சய திருத்திய நாளில் மட்டுமல்ல.. இந்த நாளிலும் தங்கம் வாங்கினால் கூட வீட்டில் பெருகுமாம்!
பூச நட்சத்திரம்: இந்த நட்சத்திரத்தின் வியாழன் பூச நட்சத்திரத்தில் தங்கம் வாங்கினால் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் உங்களுக்கு இரட்டிப்பாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதையும் படிங்க: வீட்டில் தங்கத்தை எந்த இடத்தில் வைத்தால் அள்ள அள்ள பெருகும்.. வாஸ்து டிப்ஸ் இதோ!!
தங்கம் வாங்கக்கூடாத நாள்: தங்கம் என்பது சூரிய கிரகத்தின் சின்னம் சூரியனுக்கும் சனிக்கும் இடையே பகை இருப்பதால் சனிக்கிழமை அன்று தங்கம் வாங்க வேண்டாம். மீறினால் நிதி நிலைமை பாதிக்கப்படும் மற்றும் சனி பகவானுக்கு கோபத்தை ஏற்படுத்தும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D