அட்சய திருத்திய நாளில் மட்டுமல்ல.. இந்த நாளிலும் தங்கம் வாங்கினால் கூட வீட்டில் பெருகுமாம்!
Good Day to Buy Gold in 2024 : நீங்கள் தங்கம் வாங்க திட்டமிருந்தால், இந்த நாட்களில் வாங்குங்கள். தங்கம் வீட்டில் பெருகும்.
Thangam Vanga Nalla Naal 2024
காலங்காலமாகவே, நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் தங்கத்திற்கு என சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. தங்கம் பாரம்பரியமாக கருதப்படுவதால் பலரும் இதை வாங்கி விரும்பி அணிகிறார்கள்.
Thangam Vanga Nalla Naal 2024
அந்தவகையில், சில நல்ல நாட்களில் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது. அப்படி 2024ல் எந்தெந்த நாட்களில் தங்கம் வாங்கலாம் என்று பார்க்கலாம்.
Thangam Vanga Nalla Naal 2024
நீங்கள் தங்கம் வாங்க திட்டமிருந்தால், அட்சய திருத்திய தவிர இந்த சுப முகூர்த்த நாட்களிலும் வாங்குங்கள். இதன் மூலம் வீட்டில் தங்கம் அதிகரிக்கும். எனவே,
அந்த மங்களகரமான நாட்களின் பட்டியல் இங்கே.
Thangam Vanga Nalla Naal 2024
புஷ்ய நட்சத்திரம் : ஜோதிடத்தின்படி, புஷ்ய நட்சத்திரம் வியாழன் கிரகத்தால் ஆளப்படுகிறது. மேலும் இது செழிப்பு நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தை குறிக்கிறது. எனவே, இந்த நட்சத்திரத்தில் தங்கம் வாங்குவது உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த புஷ்ய நட்சத்திரமானது ஆகஸ்ட் 3, 30, செப்டம்பர் 26, அக்டோபர் 24, நவம்பர் 20, டிசம்பர் 17 ஆகிய நாட்களில் உள்ளது.
Thangam Vanga Nalla Naal 2024
நவராத்திரி: நவராத்திரி என்பது துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள். தங்கம் தேவியின் தெய்வீக ஆற்றலை குறிப்பதால், நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் தங்கம் வாங்குவது உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி ஆனது அக்டோபர் 3ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை.
Thangam Vanga Nalla Naal 2024
தசரா: நவராத்திரியின் 10வது நாளில் தான் தசரா (அ) விஜயதசமி வருகிறது. இந்நாளில் தங்கம் வாங்கினால் அது இரட்டிப்பாகும் என்பது நம்பிக்கை.
மேலும், வாழ்க்கையில் செல்வத்தையும், செழிப்பையும் ஈர்க்க விரும்புபவர்கள், இந்நாளில் தங்கம் முதலீடுகளைச் செய்யலாம். அக்டோபர் 12ஆம் தேதி விஜயதசமி ஆகும்.
Thangam Vanga Nalla Naal 2024
தீபாவளி: தீபாவளி இந்து பண்டிகைகளில் மிகவும் முக்கிய பண்டிகளில் ஒன்றாகும். இந்நாளில் லட்சுமி தேவியின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பதால், இந்நாளில் தங்கம் வாங்க உகந்த நாளாக கருதப்படுகிறது. மேலும், அக்டோபர் 29 நவம்பர் 2 ஆகிய தினங்களில் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டத்தை ஈர்க்குமாம்.