டீ குடிச்ச உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கா..? அப்போ நீங்க 'இத' அவசியம் தெரிஞ்சிக்கனும்..!
Drinking Water After Tea : டீ குடித்த உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது என்று பலர் சொல்லுவதை நீங்கள் அடிக்கடி கேட்டு இருப்பீர்கள். அது ஏன் என்று தெரியுமா..?
![article_image1](https://static-gi.asianetnews.com/images/01hd8pypqt5abntgqevhfkx41z/milk-tea-side-effects-1697878334202_380x675xt.jpg)
டீ- யை பலரும் விரும்பி குடிப்பார்கள். பெரும்பாலானோர் ஒரு கப் டீயுடன் தங்கள் நாளை தொடங்க விரும்புகிறார்கள். ஆனால், டீயை குடித்துவிட்டு தண்ணீர் குடித்தால் அது ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
![article_image2](https://static-gi.asianetnews.com/images/01epvd03rtt7kf2jq2vjz18e0n/man-fined-20-thousand-for-tea-6-jpg_380x222xt.jpg)
டீ குடித்த உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது என்று பலர் சொல்லுவதை நீங்கள் அடிக்கடி கேட்டு இருப்பீர்கள். ஆனால், அதுதான் உண்மை. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதைப் பற்றி முழுமையாக இங்கே தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
உண்மையில் டீ குடித்த பிறகு தண்ணீர் குடிப்பதை தொடர்ந்து செய்து வந்தால் பற்கள் மஞ்சள் நிறமாக மாறும் என்கின்றனர் நிபுணர்கள். மேலும், அமிலத்தன்மை, வலி செரிமான பிரச்சனை இது போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
அதுபோல டீ குடித்த உடனே தண்ணீர் குடித்தால் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் வருமாம். உதாரணமாக வயிற்றில் வாயு உருவாவது, வீக்கம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள். இதுதவிர வயிற்றில் புண் ஏற்படும்.
இதையும் படிங்க: 'இந்த' பிரச்சனை உள்ளவர்கள் தப்பி தவறி கூட ஒருபோதும் ஈவ்னிங் டீ குடிக்காதீங்க!
மேலும் சூடான டீயை குடித்த பிறகு உடனே தண்ணீர் குடித்தால் வாயில் வெப்பநிலை மாறும். இதன் காரணமாக பற்களின் நரம்புகள் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி, பற்களின் மேல் அடுக்கு, எனாமல் சேதமடையும், பற்களின் உணர்திறன் அதிகரிக்கும், பற்களில் துவாரங்கள் மற்றும் கூச்சம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
இதையும் படிங்க: காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பழக்கம் உண்டா? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க...!!
சூடான டீ குடித்த பிறகு உடனே தண்ணீர் குடித்தால் சில நேரங்களில் சிலருக்கு இருமல், சளி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் தொண்டை வீக்கத்தையும் ஏற்படுத்தும். ஆகையால், டீ குடித்த உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D