பொண்ணு பார்க்க போன போது... பெண்களிடம் ஆண்கள் கேட்க கூடாத கேள்வியை மனைவியிடம் கேட்ட அருண் விஜய்!
நடிகர் அருண் விஜய், சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய மனைவியை பெண் பார்க்க சென்ற போது, பெண்களிடம் கேட்க கூடாத கேள்வியை கேட்டதாக கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் 70களில் இருந்து நடித்து வரும், மூத்த நடிகரான விஜயகுமாரின் ஒரே மகன் தான் அருண் விஜய். விஜயகுமாரின் முதல் மனைவியான முத்து கன்னுவிற்கு மூன்றாவதாக பிறந்தவர். அருண் விஜய்க்கு மூத்தவர்கள் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். மூத்தவர் கவிதா அமெரிக்காவில் செட்டில் ஆன நிலையில், இரண்டாவது அக்கா அனிதா மருத்துவராக உள்ளார்.
விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மூன்று மகள்களுமே அருண் விஜய்க்கு இளையவர்கள் தான். அருண் விஜய், தன்னுடைய உடன் பிறந்த சகோதரிகள் மீது எப்படி பாசம் காட்டுகிறாரோ... அதே போல் தான் தன்னுடைய அப்பாவின் இருந்தாவது மனைவிக்கு பிறந்த சகோதரிகள் மீதும், பாசம் காட்டுபவர்.
இந்நிலையில் அருண் விஜய் முதல்முறையாக தன்னுடைய மனைவியை பெண் பார்க்க சென்ற நிகழ்வு குறித்து பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். இந்த பேட்டியில்... அப்பா - அம்மா ஆர்த்தியை பற்றி வீட்டில் பேசிய பின்னர், ஹோட்டலில் தங்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சந்தித்து பேச நினைத்தோம். இந்த நிகழ்ச்சியில் அவங்க குடும்பத்தில் ஒரு 5 பேர், எங்க குடும்பத்தில் ஒரு 5 பேர் மட்டுமே இருந்தால் போதும் என முடிவு செய்யப்பட்டது.
நான் அப்பா, அம்மா, அக்கா, என சிலர் மட்டுமே அங்கு சென்ற நிலையில்... அவங்க குடும்பத்தில் கிட்ட தட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள். ஆர்த்தியின் அப்பா பொக்கே கொடுத்து வரவேற்றார். ஆர்த்தி, என் அம்மா - அப்பா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதையெல்லாம் பார்க்கும் போதே... ஏதோ முடிவு செய்துவிட்டது போலவே இருந்தது.
பின்னர் பெண்ணிடம் தனியாக பேச வேண்டும் என கூறினேன். ஒரு இரண்டு டேபிள் தள்ளி எங்களை அமர வைத்து பேச வைத்தார்கள். கொஞ்சம் சவுண்ட் அதிகமாக பேசினால் கூட அவர்களுக்கு கேட்டுவிடும். அப்போது என்ன பேசுவது என்றே தெரியவில்லை. ஆர்த்தி மிகவும் குள்ளமாக இருப்பதால் மிகப்பெரிய ஹீல்ஸ் போட்டிருந்தார்.
நான் அவரிடம் எவ்வளவு பெரிய ஹீல் போட்டு இருக்கீங்க என சாதாரணமாக கேட்டேன். பின்பு தான் தெரிந்தது இதையெல்லாம் பெண்களின் கேட்க கூடாது என்று. ஆனால் ஆர்த்தி மிகவும் கேஷுவலாக... இதோ நீங்களே பார்த்துக்கோங்க, என காலை நீட்டினார். அவர் மிகவும் கியூட்டாக அப்படி செய்தது எனக்கு பிடித்து விட்டது. பின்னர் இரு வீட்டு பெற்றோரும், பேசி தங்களுடைய திருமணம் நடந்ததாக அருண் விஜய் கூறியுள்ளார்.