Ajith Help: மகனை கண்டுகொள்ளாத விஜய்! தவித்து நின்ற சஞ்சய்க்கு.. பெரிய மனசுடன் அஜித் செய்த மிகப்பெரிய உதவி!
தளபதி விஜய்யின் மகன் சஞ்சய்க்கு, அஜித் செய்துள்ள உதவி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
என்ன தான் தல - தளபதி ரசிகர்கள் அவர்களின் படங்கள் வெளியாகும் போது... யார் பெருசு என போட்டா, போட்டியில் மோதிக்கொண்டாலும், உண்மையில் அஜித் - விஜய் இருவரும் நல்ல நண்பர்கள். சமீப காலமாக அவர்கள் சந்தித்து கொள்வதில்லை என்றாலும், அவர்களின் நட்பு மட்டும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய்... இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நிலையில், அவருக்கு தந்தை விஜய் தரப்பில் இருந்து, இதுவரை எந்த ஒரு உதவிகளும் செய்ததாக தகவல் வெளியாகவில்லை. அதே போல் விஜய்... வெளிப்படையாக தன்னுடைய மகன் இயக்குனராக அறிமுகமானதற்கு வாழ்த்து கூட கூறாத நிலையில், போன் மூலம் வாழ்த்து கூறியதாக சில செய்திகள் மட்டுமே வெளியானது.
விஜய் தன்னுடைய மகனை கண்டுகொள்ளாமல் இருக்க காரணம், அம்மாவுக்கு, சப்போர்ட் செய்து விஜய் மீது சஞ்சய் கோவத்தில் இருப்பது தான் என கூறப்படுகிறது. அவ்வப்போது விஜயின் குடும்ப பிரச்சனை பற்றிய தகவலும் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்டு வந்தாலும், இதுவரை அதிகார பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை.
இந்நிலையில்... விஜய் அவரின் மகனுக்கு உதவவில்லை என்றாலும், அஜித் சஞ்சய்க்கு செய்துள்ள உதவி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சஞ்சய் இயக்கும் படத்திற்கு PRO-வாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவை தேர்வு செய்து அவரிடம் இதுகுறித்து பேசியுள்ளனர். விஜய்யின் மகன் படத்திற்கு எப்படி PRO-வாக இருக்க முதலில் தயங்கிய அவர், பின்னர் அஜித்திடம் இதுகுறித்து பேசியுள்ளார். அப்போது அஜித் 'தாராளமாக போய் பண்ணுங்க' என பெரியமானதுடன் கூறியுள்ளார்.
அது மட்டும் இன்றி, அஜித் வெளிநாட்டில் இருந்தபடி விஜய்யின் மகன் சஞ்சய்யிடம் போனில் பேசி அவரை ஊக்குவித்து தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டே சஞ்சய் இயக்கும் படத்தை, லைகா நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்த நிலையில்... இப்படம் குறித்த அடுத்தகட்ட பணிகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் விரைவில் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.