MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • என் கனவு நனவானது ! 8 மாதம் பிளான்.. மகள் திருமணத்தில் மறக்க முடியாத தருணத்தை பகிர்ந்த அனிதா விஜயகுமார்!

என் கனவு நனவானது ! 8 மாதம் பிளான்.. மகள் திருமணத்தில் மறக்க முடியாத தருணத்தை பகிர்ந்த அனிதா விஜயகுமார்!

நடிகர் விஜயகுமாரின் பேத்தி, தியா திருமணம் குறித்து... அனிதா விஜயகுமார் தன்னால் மறக்க முடியாத தருணங்களின் புகைப்படத்தை வெளியிட்டு பூரிப்படைந்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Feb 20 2024, 09:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின், இரண்டாவது மகளான டாக்டர் அனிதா விஜயகுமாரின் மகள் தியாவுக்கு நேற்று, சென்னை மகாபலிபுறத்தில் உள்ள பீச் ரிசார்ட்டில் திருமணம் நடந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

தியா திருமணத்தை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாகவே... விஜயகுமாரின் வீடு திருமண கொண்டாட்டத்தால் களைகட்டிய நிலையில், ஹல்தி, மெஹந்தி, வெட்டிங் பார்ட்டி, ரிசெப்ஷன் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தன்னுடைய மகளுக்கு செய்து அழகு பார்த்தார் அனிதா விஜயகுமார்.

Trisha React AV Raju Speech :தன்னை பற்றிய சர்ச்சை பேச்சுக்கு.. தரமான பதிலடி கொடுத்த நடிகை த்ரிஷா!

39

திருமணம் முடிவானதில் இருந்து, சுமார் 8 மாதங்கள்... திருமணத்தில் ஒவ்வொன்றும் எப்படி இருக்க வேண்டும் என பல்வேறு கனவுகளுடன் தியா - தில்லான் திருமணத்தில் நடத்தியுள்ளார்.

49

மேலும் தியாவின் திருமணத்தில், நடிகர் பிரபு, ரஜினிகாந்த், சினேகா, உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.

Serial Actress Arrested: பிரபல பாடலாசிரியர் சினேகன் அளித்த மோசடி புகார்! சீரியல் நடிகை அதிரடி கைது!

59

அதே போல் விஜயகுமார் குடும்பத்தில் இருந்து, தாய் மாமன் அருண் விஜய், அவரின் மனைவி, பிள்ளைகள், ப்ரீத்தா ஹரி, ஸ்ரீதேவி, கவிதா, மற்றும் அவரின் பிள்ளைகள் என திருமணம் களைகட்டியது. வனிதா இந்த திருமணத்தில் இல்லாததையும் நெட்டிசன்கள் சுட்டி காட்டி வந்தனர்.

69

பிரமாண்டமாக தியாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த திருமணம் குறித்து... மிகவும் பூரிப்புடன் பதிவு ஒன்றை போட்டு, இத்துடன் சில புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார்.

Rituraj Singh Death: மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் மாரடைப்பு! துணிவு பட நடிகர் மரணம்.!

79

இதில் என் கனவு நினைவாகி விட்டது. என் இளவரசிக்கு அவள் ஆசைப்பட்டது போலவே மிகவும் சிறப்பாக திருமணம் நடந்து முடிந்தது. இதற்காக கடந்த 8 மாதமாக நிறைய பிளான் செய்து.. அதனை எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல முறையில் நிறைவேற்றி கொடுத்த ஒட்டுமொத்த நிகழ்ச்சி குருவினருக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் நன்றி. 

89

ஒவ்வொரு விவரங்களையும் ஆராய்ந்து, இந்தத் திருமணத்தை மாபெரும் வெற்றியடையச் செய்த குழுவினருக்கு நன்றி. நம்பமுடியாத விதவிதமான அலங்காரங்கள் செய்த குழுவினருக்கும் நன்றி, ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அழகாகவும், தரமாகவும் நிரம்பியிருக்கிறது. 

Not Simbu First Choice: 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில்.. சிம்புவுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இவரா?

99

உங்கள் குழுவை நாங்கள் என்றென்றும் நினைப்போம். அதே போல் விருந்தோம்பல் மற்றும் அற்புதமான உணவு கொடுத்த குழுவினருக்கும் நன்றி. இந்த அழகான நிகழ்வில் எங்களுடன் இருந்த நல்லிதயம் கொண்ட மக்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு என் இதயத்தின் அடிப்பகுதியில் நன்றி தெரிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அருண் விஜய்
ஸ்ரீதேவி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved