சிலேட்டு குச்சி சாப்பிடும் பழக்கம் இருக்கா..? இந்த அதிர்ச்சி பதிவு உங்களுக்காக தான்!
சிலேட்டு குச்சி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

பலருக்கு சிலேட்டு குச்சி சாப்பிடும் பழக்கம் உண்டு. ஏன் உங்கள் தோழி, தங்கை கூட சாப்பிட்டு இருக்கலாம். அதுவும் குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள்தான் இதை அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால், அந்த பழக்கம் சின்ன வயதில் இருக்குமே தவிர, காலப்போக்கில் அது மாறிவிடும்.
தற்போது, சிலேட்டு குச்சியை கடைகளில் பார்த்தால் கூட உடனே வாங்கி சாப்பிட வேண்டும் என்று தோன்றும். சிலேட்டு குச்சி சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும், அது உடலுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அந்த பாதிப்பு நீண்ட காலம் நீடிக்குமாம்.
அதாவது நீங்கள் சிறு வயதில் சிலேட்டு குச்சியை சாப்பிட்டு இருந்தால் அதன் பக்க விளைவுகள் இளமையில் தான் தெரியுமாம். எனவே, சிலேட்டு குச்சி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
சிலேட்டு குச்சி சுண்ணாம்பு கொண்டு கலந்து தான் தயாரிக்கப்படுகிறது. எனவே, இது சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கேடு. ஆனால், சிலேட்டு குச்சி சாப்பிடும் பழக்கம் குழந்தைகள்தான் அதிகமாக இருக்கிறது. காரணம், அவர்களுக்கு இருக்கும் இரும்புச்சத்து குறைபாடே.
பெண்களுக்கு சிறுநீரகத்தில் கல் உருவாவத் முக்கிய காரணம் இந்த சிலேட்டு குச்சி தான். எப்படி எனில் அவர்கள் சிறுவயதில் ஸ்லைட் குச்சி சாப்பிட்டதின் விளைவு தான் இது.
இதையும் படிங்க: குளிக்கும்போது நீங்க செய்யக்கூடாத பொதுவான தவறுகள்.. மீறினால் இந்த பிரச்சனைகள் வரும்!
சிலேட்டு குச்சி சாப்பிட்டால் செரிமான பிரச்சனை, இரத்த சோகையும் உண்டாகும். அதுமட்டுமின்றி, சிலேட்டு குச்சி சாப்பிடுவதால் முதலில் பாதிக்கப்படும் உறுப்பு சிறுநீரகங்கள் தான். மேலும், இதை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, மாதவிடாய் தள்ளிப் போவது, வயிற்றில் கட்டிகள் போன்ற பிரச்சனைகள் உருவாகும்.
இதையும் படிங்க: வெங்காயத்தை சுற்றி கருப்பு அச்சுஇருக்கிறதா..? எச்சரிக்கை.. முழுவிளக்கம் இங்கே..
அதுபோல, சிலேட்டு குச்சியை சாப்பிடுவதால் பற்களும் பாதிக்கப்படும். காலப்போக்கில் பற்கள் ஆரோக்கியமற்றதாகி விடும். அதுமட்டுமின்றி இதன் நுகர்வு தாடிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தாடையில் வலி ஏற்படும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D