ரெடியாகும் ஜெயிலர் 2.. பல மடங்கு எகிறும் நெல்சனின் சம்பளம் - "2ம் பாகம்" அதனால கொஞ்சம் பாத்து பண்ணுங்க!
Nelson Salary for Jailer 2 : கடந்த 2023ம் ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஸ்டாரின் "ஜெயிலர்" திரைப்படம் மெகாஹிட் படமாக மாறியது.
Kolamavu kokila
"கோலமாவு கோகிலா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை, இயக்குனராக தொடங்கியவர் தான் நெல்சன் திலீப் குமார். இதுவரை குறைந்த அளவிலான படங்களை நான் இயக்கியிருக்கிறார் என்றுபொழுதும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை அவர் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தியேட்டர்ல கதறவிட்டது பத்தாதுனு இப்போ ஓடிடில வேறயா! இந்தியன் 2 படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு
Beast
இந்நிலையில் தளபதி விஜயை வைத்து "பீஸ்ட்" என்ற வெற்றிப்படத்தை கொடுத்த நெல்சன், அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வெளியிட்ட படம் தான் ஜெயிலர். கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி, உலக அளவில் சுமார் 640 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது ஜெயிலர்.
Jailer
இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதே போல நெல்சனும் அந்த திரைப்பட பணிகளை இப்பொது துவங்கியுள்ளார். விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Jailer 2
இந்நிலையில் ஏற்கனவே ஜெயிலர் படத்திற்காக 10 கோடி ரூபாய் சம்பளமாக பெற்ற நெல்சன், தற்பொழுது தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளதாகவும், ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு அவர் 60 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.