லோகேஷ் கனகராஜ் திரைக்கதையில் ராகவா லாரன்ஸ்.. உறுதியான கூட்டணி.. ஹீரோயின் யார் தெரியுமா? மாஸ் அப்டேட்!
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கதை, திரைக்கதை மற்றும் தயாரிப்பில் வெளியாகவுள்ள உள்ள ஒரு திரைப்படத்தில், பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை நடிகர் லாரன்ஸ் அவர்களும் உறுதிப்படுத்தி உள்ளார் என்று கூறப்படுகிறது.
Lokesh Kanagaraj and Ulaga Nayagan
தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் மாறி உள்ளார் என்று கூறினால் அது மிகையல்ல. ஏற்கனவே பல வெற்றி படங்களை கொடுத்த அவர், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை வைத்து இயக்கி வெளியிட்ட விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தளபதி விஜய் உள்ளிட்ட இந்திய சினிமாவின் ஒட்டுமொத்த முன்னணி நடிகர்களை கொண்டு லியோ என்ற திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார்.
படக்கென போயஸ் கார்டன் சென்ற OPS.. சூப்பர் ஸ்டாரை சந்தித்து 1 மணிநேரம் ஆலோசனை - என்ன பேசிருப்பாங்க?
Director Ratnakumar
ஏறத்தாழ இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் விரைவில் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் விருந்தாக உள்ளது. இந்நிலையில் அவரிடம் உதவி இயக்குனராக மற்றும் கதாசிரியராக பணியாற்றி வரும் ரத்தினகுமார் ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் திரு. ராகவா லாரன்ஸ். மேலும் இந்த திரைப்படத்தில் கதை, திரைக்கதை மற்றும் தயாரிப்பு பணிகளை லோகேஷ் கனகராஜ் அவர்களே மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Lady Super Star Nayanthara
கூடுதல் சிறப்பாக இந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. தனது தம்பியின் புல்லட் திரைப்படத்தில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ் அவர்கள் அந்த திரைப்பட பணிகளை முடித்த பிறகு, இந்த திரைப்பட பணிகளில் இணைவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.