படக்கென போயஸ் கார்டன் சென்ற OPS.. சூப்பர் ஸ்டாரை சந்தித்து 1 மணிநேரம் ஆலோசனை - என்ன பேசிருப்பாங்க?
பெங்களூரு சென்று திரும்பியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை, சென்னையில் உள்ள அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் உரையாடி உள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் சிறப்பான வகையில் ஓடி வருகிறது. சுமார் 600 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வரும் இந்த திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சூப்பர் ஸ்டாருக்கு (சம்பளம் இல்லாமல்) 100 கோடி ரூபாய்க்கான செக் மற்றும் 2 சொகுசு கார்களை பரிசாக வழங்கினார் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.
அதேபோல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவர்களுக்கும் கணிசமான தொகையை செக் வடிவில் (சம்பளம் இல்லாமல்) வழங்கி ஒரு Porsche Macan காரையும் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பாகவே தனது ஆன்மீக பயணத்தை துவங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், இமயமலை சென்று திரும்பிய பிறகு பல அரசியல் தலைவர்களை தொடர்ச்சியாக சந்தித்து வந்தார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - வானதி சீனிவாசன் கருத்து
அதன் பிறகு சென்னை திரும்பிய அவர் ஜெயிலர் திரைப்பட குழுவுடன் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினார். அதன் பிறகு TJ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தின் பூஜையில் பங்கேற்ற அவர் சர்ப்ரைஸாக பெங்களூருக்கு சென்று அங்கு தான் பணியாற்றிய பேருந்து பணிமனையில் தனது நண்பர்களை சந்தித்து உரையாடினார்.
அதன் பிறகு அவர் பிறந்த நாச்ச குறிச்சி கிராமத்திற்கு சென்று அவருடைய தாய் மற்றும் தந்தையின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு சென்னை திரும்பியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இன்று அவருடைய போயஸ் கார்டன் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து பேசி உள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள். மேலும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான ஒரு சந்திப்பு தான் என்றும், அரசியல் உள்நோக்கம் இதில் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
படப்பிடிப்புகளுக்கு நடுவே அண்ணாமலையாரை தரிசித்த நடிகர் அருண் விஜய்