Asianet News TamilAsianet News Tamil

எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - வானதி சீனிவாசன் கருத்து

எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கருத்து தெரிவித்துள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், எங்களது என்டிஏ கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

people will not support in india alliance says mla vanathi srinivasan vel
Author
First Published Sep 2, 2023, 4:56 PM IST

பாரதிய ஜனதா கட்சியின்  மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.  அப்பொழுது அவர் பேசுகையில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்களுக்கு முதலில் குரல் கொடுப்பது பாஜக மகளிர் அணி மட்டும்தான். பெண்களுக்கு எதிரான போராட்டங்களில் பாஜக மகளிர் அணி செயல்பட்டு வருகிறது என்றார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானதி சீனிவாசன், பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து பாஜகவின் மகளிர் அணி சார்பில் பல்வேறு பிரசாரங்களை மேற்கொள்ள இருக்கிறோம். இதில் மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்ல ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் அரசின் திட்டங்களை எடுத்து கூறி வருகின்றனர்.

சீமான் தனித்து நிற்கவில்லை; அவரை யாரும் சேர்த்துக்கொள்ளவில்லை - அண்ணாமலை விமர்சனம்

200 ரூபாய் கேஸ் விலையை குறைத்து இருப்பது அரசியலுக்காக அல்ல. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 100 குறைப்பேன் என்று கூறிவிட்டு இதுவரை குறைக்கவில்லை. அவர்கள் மத்திய அரசு கேஸ் விலையை குறைக்க வேண்டும் என்று கூறுவதற்கு தகுதி கிடையாது. 

ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் வெற்றி பெறவும் முடியாது. எத்தனை பேர் சேர்ந்தாலும் ஒன்றும் சாதிக்கவும் முடியாது. அந்த கூட்டணியை தேர்தல் வரை கொண்டு செல்வார்களா? என்பது தெரியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கிறது என்பதை சென்ற மாதம் நடந்த கூட்டத்தின் மூலம் அனைவருக்கும் தெரியும். மேலும் எங்கள் கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

அமெரிக்கா, சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை - ஆளுநர் ராதாகிருஷ்ணன்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைவரிடமும் கருத்து கேட்டு மத்திய அரசு முடிவு செய்யும். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios