Asianet News TamilAsianet News Tamil

குடிபோதையில் பிரபல நடிகை திரிஷா.. கேரவனுக்குள் டாப் நடிகருடன் தகராறு.. புட்டு புட்டு வைத்த பிரபல விமர்சகர்!

சென்னையில் பிறந்து எத்திராஜ் கல்லூரியில் படித்து பட்டம் பெற்று, அதன் பிறகு மாடலிங் துறையில் களமிறங்கி, இறுதியில் இப்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக கடந்த 24 ஆண்டுகளாக பயணித்து வரும் ஒரு நடிகை தான் திரிஷா கிருஷ்ணன்.

Top Kollywood Actress Trisha Fight with top tamil actor after getting drunk says cheyyar balu ans
Author
First Published Sep 2, 2023, 4:26 PM IST

ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையில் பயணித்து வந்த திரிஷா, 1999 ஆம் ஆண்டு பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளிவந்த ஜோடி என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து அதன் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு கிடைத்த முதல் வாய்ப்பு தான் "மௌனம் பேசியதே", இந்த திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் சிறியது என்றாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் அவர். 

அதன் பிறகு வெளியான மனசெல்லாம், சாமி, லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18 ஆகிய எல்லா திரைப்படங்களுமே இவருக்கு சூப்பர் ஹிட் திரைப்படங்களாக அமைந்தது. குறிப்பாக கடந்த 2004 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் திரிஷாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றே கூறலாம். 

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 'வடக்குபட்டி ராமசாமி' படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

அன்பு தொடங்கி இன்று வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் என்று பல இந்திய மொழிகளில் சுமார் 24 ஆண்டுகளாக பயணித்து வருகிறார் திரிஷா. இறுதியாக இவருடைய நடிப்பில் தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான நிலையில் தற்போது தளபதி விஜயுடன் நடித்து வரும் லியோ திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வருகிறது. 

Actress Trisha Krishnan

இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு அவர்கள் திரிஷாவை குறித்த சில விஷயங்களை கூறியுள்ளார். அவர் கூறியது பின் வருமாறு.. திரிஷாவுக்கு ஒரு காலகட்டத்தில் குடிப்பழக்கம் அதிகமாக இருந்தது உண்மைதான், அப்பொழுது ஒரு மிகப்பெரிய நடிகருடன் ஒரு படத்தில் அவர் நடித்து வந்திருந்தார், அப்பொழுது படப்பிடிப்புக்கு இடையே கிடைத்த இடைவெளியில், அந்த ஹீரோவும் அவரும் ஒன்றாக இணைந்து மது குதித்துள்ளனர். 

Trisha Krishnan

ஒரு கட்டத்தில் திரிஷாவிற்கு மது போதை தலைக்கேரிய நிலையில், கேரவனில் இருந்த அந்த டாப் நடிகருடன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார் திரிஷா என்றார் பாலு அவர்கள். இது அப்போது பல பத்திரிகைகளில் செய்திகளாக வெளிவந்தது, ஆனால் திரிஷா அதற்கு எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்கவில்லை என்றும் செய்யாறு பாலு தெரிவித்தார். 

Ethirneechal Update: ஆமா ஜீவானந்தத்தை கல்யாணம் பண்ணி இருப்பேன்! ஷாக் கொடுத்த ஈஸ்வரி... அசிங்கப்பட்ட குணசேகரன்!

Follow Us:
Download App:
  • android
  • ios