MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மூன்றாவது முறை.. மாஸ் நடிகருக்கு பக்காவா ஒரு ஸ்கெட்ச் போடும் லோகேஷ் கனகராஜ் - தலைவர் 171 வில்லன் அவர் தானா?

மூன்றாவது முறை.. மாஸ் நடிகருக்கு பக்காவா ஒரு ஸ்கெட்ச் போடும் லோகேஷ் கனகராஜ் - தலைவர் 171 வில்லன் அவர் தானா?

Lokesh Kanagaraj : தளபதி விஜய் அவர்களுடைய லியோ திரைப்பட வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த பட பணிகளை துவங்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். மேலும் பல முன்னணி நடிகர்களுடன் விரைவில் அவர் இணையவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 Min read
Ansgar R
Published : Dec 30 2023, 01:50 PM IST| Updated : Dec 30 2023, 01:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Vettaiyan

Vettaiyan

பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தற்பொழுது உருவாகி வரும் வேட்டையின் திரைப்பட பணிகளில் ஈடுபட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் விஜயகாந்த் அவர்களுடைய மரண செய்தியை கேட்டு நாகர்கோவிலில் நடந்து கொண்டிருந்த வேட்டையின் திரைப்பட படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அவர் சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது.

நெல்லையில் விஜய்.. நிவாரண பொருட்கள் வழங்கும் பணி துவங்கியது - தளபதியோடு Selfie எடுத்து மகிழும் மக்கள்!

23
Thalaivar 171

Thalaivar 171

வேட்டையின் பட பணிகளை முடித்த பிறகு, சில காலம் ஓய்வெடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தனது 171வது திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த திரைப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

33
Vijay sethupathi

Vijay sethupathi

மாநகரம் துவங்கி பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இப்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறியுள்ளார் என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் தலைவர் 171 திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க, அவருடன் ஏற்கனவே இரு திரைப்படங்களில் பணியாற்றிய ஒரு முன்னணி நடிகரை அவர் அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படத்தில் மிக நேர்த்தியாக நடித்து மக்களின் பாராட்டுகளை பெற்ற நடிகர் விஜய் சேதுபதி தான் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இன்னும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved