வணங்கான் டிராப்... பாதியில் கழட்டிவிட்ட சூர்யாவுடன் மீண்டும் இணைவீர்களா? இயக்குனர் பாலாவின் நெத்தியடி பதில்
நடிகர் சூர்யா உடன் மீண்டும் இணைய வாய்ப்பிருக்கா என்பது குறித்த கேள்விக்கு டெவில் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாலா மனம் திறந்து பேசி உள்ளார்.
Suriya, Bala
நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இயக்குனர் என்றால் அது பாலா தான். அவர் இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா திரைப்படம் தான் சூர்யாவுக்கு இருக்கும் முழு நடிப்பு திறமையையும் வெளிக்கொண்டு வந்த படமாகும். அதன்பின் பிதாமகன் படத்தின் மூலம் அடுத்த கட்டத்துக்கு சென்றார் சூர்யா. இப்படி சூர்யாவுக்கு இரண்டு மறக்கமுடியாத படங்களை கொடுத்த பாலா அதன் பின் கடந்த 18 ஆண்டுகளாக அவருடன் இணையாமல் இருந்து வந்தார்.
vanangaan dropped
இந்த நிலையில், கடந்தாண்டு சூர்யாவும், பாலாவும் கடந்த 2022ம் ஆண்டு வணங்கான் என்கிற படத்துக்காக மீண்டும் இணைந்தனர். அப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்தது. அதில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்தார். இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட ஒரு மாதம் கன்னியாகுமரியில் நடைபெற்றது. இதில் சூர்யா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Arun vijay, suriya
முதற்கட்ட படப்பிடிப்பின் போது சூர்யாவுக்கும் பாலாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாகவும், அதனால் சூர்யா ஷூட்டிங்கை பாதியில் நிறுத்திவிட்டு கிளம்பியதாக கூறப்பட்டது. அத்துடன் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படாமலே இருந்த நிலையில், நடிகர் சூர்யா இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக இயக்குனர் பாலா அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.
Director Bala
சூர்யாவுடனான சண்டை தான் பாலாவின் இந்த முடிவுக்கு காரணம் என கூறப்பட்டது. சூர்யா வணங்கான் படத்தில் இருந்து விலகிய பின்னர் அப்படத்தை அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து எடுத்து வருகிறார். இந்த நிலையில் மிஷ்கின் இசையமைத்த டெவில் பட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாலாவிடம் சூர்யாவுடன் மீண்டும் இணைவீர்களா என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சூர்யா என் தம்பி மாதிரி, கண்டிப்பாக இணைந்து பணியாற்றுவேன் எனக்கூறி தங்களைப் பற்றிய வதந்திக்கெல்லாம் நெத்தியடி பதில் கொடுத்துள்ளார் பாலா.
இதையும் படியுங்கள்... அடுத்த பலி ஆடு இவர்தானா! பிரதீப்பை தொடர்ந்து இன்னொரு போட்டியாளரை ரெட் கார்டு கொடுத்து தூக்க பிளான் போடும் மாயா