- Home
- Gallery
- நடிகைகளுடன் ரகசிய உறவு... திருமணத்துக்கு பின் கிளுகிளுப்பாக வாழ ஆசைப்பட்டு கிசுகிசுவில் சிக்கிய பிரபலங்கள்
நடிகைகளுடன் ரகசிய உறவு... திருமணத்துக்கு பின் கிளுகிளுப்பாக வாழ ஆசைப்பட்டு கிசுகிசுவில் சிக்கிய பிரபலங்கள்
திருமணத்துக்கு பின்னர் நடிகைகளுடன் ரகசிய உறவில் இருந்த தமிழ் சினிமா பிரபலங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Nagarjuna - Tabu
நாகார்ஜுனா - தபு
நடிகர் நாகார்ஜுனா லட்சுமி, நடிகை அமலா என இருவரை திருமணம் செய்துகொண்டாலும், திருமணத்துக்கு பின்னர் அவர் நடிகை தபுவுடன் ரகசிய உறவில் இருந்ததாக பரபரப்பாக பேசப்பட்டது. அவருடன் உறவில் இருந்ததால் தான் நடிகை தபு திருமணமே செய்துகொள்ளவில்லை என்றும் பேச்சு அடிபட்டது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இருவரும் ரகசிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தாங்கள் இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்று தபு, நாகார்ஜுனா இருவருமே பல்வேறு பேட்டிகளில் கூறி இருக்கின்றனர்.
Sridevi - Boney Kapoor
போனி கபூர் - ஸ்ரீதேவி
பாலிவுட்டில் பல்வேறு ஹிட் படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். இவரது முதல் மனைவி பெயர் மோனா கபூர். இவர்களது திருமண வாழ்க்கை 13 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இவர்களின் பிரிவுக்கு நடிகை ஸ்ரீதேவி தான் காரணம் என கூறப்படுகிறது. ஏனெனில் முதல் மனைவி மோனா கபூரை பிரியும் முன்னரே நடிகை ஸ்ரீதேவி உடன் ரகசிய உறவில் இருந்தாராம். இதன் காரணமாக திருமணத்துக்கு முன்பே நடிகை ஸ்ரீதேவி கர்ப்பமானதாகவும் அந்த சமயத்தில் கிசுகிசுக்கள் உலா வந்தன.
Prabhu Deva - nayanthara
பிரபுதேவா - நயன்தாரா
இந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடன இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இவர் கடந்த 1995-ம் ஆண்டு ரம்லத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடி கடந்த 2011-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தது. இவர்களின் பிரிவுக்கு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடனான ரகசிய உறவும் ஒரு காரணமாக கூறப்பட்டது. ரம்லத்தை விவாகரத்து செய்யும் முன்பே நடிகை நயன்தாராவை காதலித்து வந்தார் பிரபுதேவா. இதை அறிந்து கடுப்பான ரம்லத், நயன்தாராவை எங்கு பார்த்தாலும் மிதிப்பேன் என்று ஆவேசமாக கூறி இருந்தார்.
இதையும் படியுங்கள்... EMI கட்டல... ஷாருக்கானின் காரை பறிமுதல் செய்த வங்கி அதிகாரிகள் - பாலிவுட் பாட்ஷாவின் சோகக்கதையை சொன்ன பிரபலம்
Amala Paul - dhanush
தனுஷ் - அமலா பால்
கோலிவுட்டில் அதிக கிசுகிசுக்களில் சிக்கிய ஹீரோக்களில் தனுஷும் ஒருவர். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து கடந்த 2004-ம் ஆண்டு கல்யாணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த ஜோடியின் விவாகரத்துக்கு தனுஷ் - நடிகை அமலா பால் இடையேயான கிசுகிசுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
KS Ravikumar - Ramya Krishnan
கே.எஸ்.ரவிக்குமார் - ரம்யாகிருஷ்ணன்
கோலிவுட்டில் கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுப்பதில் கில்லாடி இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணனை காதலித்ததாக கோடம்பாக்கத்தில் ஒரு கிசுகிசு பரவியது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் தொடர்ச்சியாக நடித்து வந்ததால் அவர்கள் இருவருக்கும் இடையே ரகசிய உறவு இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் அவரின் மனைவிக்கு தெரிந்ததால் இருவரும் பிரிந்துவிட்டதாக கிசுகிசுக்களும் உலா வந்தன.
Kamalhaasan - simran
கமல்ஹாசன் - சிம்ரன்
உலகநாயகன் கமல்ஹாசனும் பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். முதலில் வாணி கணபதி, இரண்டாவதாக சரிதா ஆகியோரை திருமணம் செய்துகொண்ட கமலுக்கு அந்த இரண்டு திருமண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்தது. பின்னர் நடிகை சிம்ரனை அவர் காதலித்து வந்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. இதனால் கடுப்பான கமல், என் வீட்டு பெட்ரூமை எட்டிப்பார்குறது தான் உங்க வேலையா என காட்டமாக பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... கல்கி 2898 ஏடி : அர்ஜுனன் கேமியோவில் நடிக்க விஜய் தேவரகொண்டா எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?