- Home
- Gallery
- EMI கட்டல... ஷாருக்கானின் காரை பறிமுதல் செய்த வங்கி அதிகாரிகள் - பாலிவுட் பாட்ஷாவின் சோகக்கதையை சொன்ன பிரபலம்
EMI கட்டல... ஷாருக்கானின் காரை பறிமுதல் செய்த வங்கி அதிகாரிகள் - பாலிவுட் பாட்ஷாவின் சோகக்கதையை சொன்ன பிரபலம்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தான் வாங்கிய காருக்கு இ.எம்.ஐ கட்ட முடியாமல் கஷ்டப்பட்டதாக அவருடன் நடித்த நடிகை ஒருவர் கூறி இருக்கிறார்.

shahrukh khan
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். எந்தவித பின்புலமும் இன்றி சொந்த உழைப்பால் சினிமாவில் நடித்து முன்னேறிய அவர் இன்று டாப் நடிகராக இருப்பதோடு மட்டுமின்றி ரூ.6300 கோடி சொத்துக்களுடன் இந்திய சினிமாவில் பணக்கார நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். அவர் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த பதான், ஜவான் ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
shahrukh khan car
ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் ஷாருக்கான் நடித்த டங்கி திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. அப்படமும் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இப்படி ஒரே ஆண்டில் ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த ஷாருக்கான், ஒரு காலத்தில் காருக்கு இ.எம்.ஐ கூட கட்ட முடியாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார். அதுவும் அவர் ஆசை ஆசையாய் வாங்கிய காரை வங்கி அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டு சென்ற சோக சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.
இதையும் படியுங்கள்... Coolie Movie Update : ரஜினியின் கூலி படத்துக்காக மீண்டும் மச்சி உடன் கூட்டணி... லோகேஷ் கனகராஜ் செம்ம ஹாப்பி
juhi Chawla, shahrukh khan
அதுபற்றி நடிகர் ஷாருக்கானின் தோழியும், அவருடன் நடித்த சக நடிகையுமான ஜூகி சாவ்லா பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அவர் கூறியதாவது : “'ஷாருக்கானிடம் ஒரு கருப்பு ஜிப்சி இருந்தது. அவர் என்னுடன் 'ராஜு பன் கயா ஜென்டில்மேன்', 'தில் ஆசனா' ஆகிய படங்களிலும் மற்றும் திவ்யபாரதியுடன் மற்றொரு படத்திலும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சமயம் அது. அப்போது 24 மணி நேரமும் உழைக்கும் கடின உழைப்பாளியாக இருந்தார் ஷாருக்.
shahrukh khan not able to pay EMI for his car
சில காரணங்களால், அவரால் தனது காரின் EMI செலுத்த முடியாமல் போனது. அப்போது வங்கியில் இருந்து வந்து அவரது காரை ஜப்தி செய்தனர். அப்போது மனமுடைந்த நிலையில் சோகமாக படப்பிடிப்புக்கு வந்தார். ஏன் வருந்துகிறீர்கள்... எதிர்காலத்தில் நீங்கள் ஒன்றல்ல பல கார்களுக்கு சொந்தக்காரராக இருப்பீர்கள் என்று சொல்லி ஆறுதல் படுத்தி இருக்கிறார் ஜூகி சாவ்லா. அவர் சொன்னபடியே இன்று பல கோடி ரூபாய் மதிப்பிலான கார்களை தன் வீட்டில் வரிசைகட்டி நிறுத்தி வைத்திருக்கிறார் ஷாருக்.
இதையும் படியுங்கள்... ஷாலினிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் மனைவி கையை பிடித்திருக்கும் அஜித்.. வைரலாகும் புகைப்படம்!