- Home
- Gallery
- கல்கி 2898 ஏடி : அர்ஜுனன் கேமியோவில் நடிக்க விஜய் தேவரகொண்டா எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?
கல்கி 2898 ஏடி : அர்ஜுனன் கேமியோவில் நடிக்க விஜய் தேவரகொண்டா எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?
கல்கி 2898 ஏடி படத்தில் விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், ராம் கோபால் வர்மா மற்றும் எஸ்எஸ் ராஜமௌலி உள்ளிட்டோர் கேமியோ ரோல்களில் நடித்துள்ளனர். இதில் அர்ஜூனனாக நடித்த விஜய் தேவரகொண்டாவின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகி உள்ள கல்கி 2898 ஏடி படம் உலகளவில் கவனம் ஈர்த்து வருகிறது. பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல்ஹாசன் மற்றும் திஷா பதானி என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்து வருகிறது. 'கல்கி 2898 ஏடி படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகள், சுவாரஸ்யமான கதை ஆகியவை ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
600 கோடி என்ற பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான படம், இதுவரை 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் இந்த படம் 1000 கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் பல நடிகர் நடிகைகளும் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளதும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், ராம் கோபால் வர்மா மற்றும் எஸ்எஸ் ராஜமௌலி ஆகியோரின் பாத்திரங்கள் ரசிகர்களிடையே குறிப்பிடத்தக்க சலசலப்பை உருவாக்கியுள்ளன.
தற்போது மிகவும் அபிமான நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா, மகாபாரதத்தில் வரும் அர்ஜுனன் வேடத்தில் கல்கி 2898 படத்தில் நடித்திருந்தார்.. ஆனால் கேமியோ ரோலில் நடிக்க விஜய் தேவரகொண்டா சம்பளமே வாங்கவில்லையாம்.
இந்த பிரம்மாண்ட படத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வகையில் அர்ஜூனன் ரோலில் ஃப்ரீயாகவே நடித்து கொடுத்துள்ளாராம். அதே போல் இந்த கேமியோ ரோலில் நடித்த துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், ராம் கோபால் வர்மா, ராஜமௌலி என யாருமே சம்பளம் வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
விஜய் தேவரகொண்டாவின் கேமியோ சுருக்கமாக இருந்தாலும், கல்கி 2898 ஏடி படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் அவர் மீண்டும் கேமியோ ரோலில் நடிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாபாரதப் போருக்கு 6000 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்காலத்தில் நடக்கும் இந்த கதையில், பிரபாஸ் பைரவா என்ற ரோலிலும், தீபிகா படுகோன், SUM-80 என அழைக்கப்படும் சுமதி என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
அமிதாப் பச்சன் மகாபாரத இதிகாசத்தின் அஸ்வத்தாமாவாகவும், கமல்ஹாசன் யாஸ்கின் என்ற சுப்ரீம் லீடராகவும் நடித்துள்ளார். 'கல்கி 2898 கி.பி' குறிப்பிடத்தக்க பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை அடைந்தது மட்டுமல்லாமல், இந்திய சினிமாவை உலக சினிமாவை நோக்கி நகர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.