ரஜினியை உரித்து வைத்திருக்கும் ஐஸ்வர்யா மகன் யாத்ரா! அப்பா தனுஷுடன் ஏர்போர்ட்டில்.. வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகர் தனுஷ் 'குபேரா' படப்பிடிப்பின் ஷெடியூலை முடித்து கொண்டு, மும்பையில் இருந்து சென்னை திரும்பும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Dhanush in mumbai
தேசிய விருது நடிகராக அறியப்படும் தனுஷ், தன்னுடைய 50-ஆவது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்து முடித்த கையோடு, இயக்குனர் சேகர் காமுலா இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் 'குபேரா' படத்தில் இணைந்துள்ளார்.
Dhanush
இந்த படத்தின் படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் படபிடிப்பு கடந்த 10 நாட்களாக மும்பையில் நடைபெற்று வந்த நிலையில், அதன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட தனுஷ், தன்னுடைய மகன்கள் லிங்கா மற்றும் யாத்ராவையும் தன்னுடன் அழைத்து சென்றிருந்தார்.
Actor Dhanush
படப்பிடிப்பு முடிந்து மும்பையில் இருந்து விமான மூலம் மகன்களோடு சென்னை திரும்பிய தனுஷின் ரீசன்ட் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் தனுஷின் மகன் யாத்ராவை பார்ப்பதற்கு, அப்படியே ரஜினி சாயலை உரித்து வைத்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
குபேரா திரைப்படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து நாகஜுனா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் ஹிந்தியில் கமிட் ஆகியுள்ள படத்தில் தனுஷ் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் அடுத்தடுத்த படங்கள் ஒருபுறம் இருந்தாலும், தனுஷ் வடசென்னை பகுதியை மையப்படுத்தி எடுத்துள்ள 'ராயன்' படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து தனுஷின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
'முதல்வன்' படத்தில் மனிஷா கொய்ராலாவுக்கு பதில் நடிக்க இருந்த ஹீரோயின் யார் தெரியுமா? காரணம் இதுதான்!
மேலும் மும்பை ஏர்போர்ட்டில், தனுஷ் தன்னுடைய மகன்களுடன் மிகவும் சாதாரணமாக டிராக் சூட், டி-ஷர்ட் தலையில் ஒரு கேப் என செம ஸ்டைலிஷ் ஆக வந்திருந்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், தனுஷின் மகன்கள் இருவரும் அப்பா - அம்மா என மாறி மாறி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தனுஷ் தன்னுடைய பட விழாக்கள் மற்றும் ஷூட்டிங் செல்லும்போது தன்னுடைய மகன்களையும் தன்னுடனே அழைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.