MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அன்று சுமார் மூஞ்சி குமாரு... இன்று அடுத்த சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு கொண்டாடப்படும் தனுஷின் Net Worth இதோ

அன்று சுமார் மூஞ்சி குமாரு... இன்று அடுத்த சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு கொண்டாடப்படும் தனுஷின் Net Worth இதோ

நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 28 2024, 11:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Dhanush

Dhanush

தமிழ் சினிமாவில் நடிப்பு அசுரனாக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என சினிமாவில் ஒரு ஆல் ரவுண்டராக ஜொலித்து வருகிறார். தனுஷின் இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு, சினிமாவுக்காக அவர் தன் பெயரை தனுஷ் என மாற்றி வைத்துக்கொண்டார். அறிமுகமாகும் போது ஒல்லியான உடல் அமைப்புடன், சுமார் மூஞ்சி குமாராக இருந்த தனுஷை பார்த்து இவரெல்லாம் ஹீரோவா என அன்று விமர்சிக்காத ஆளே இல்லை. அன்று தன்னை விமர்சித்தவர்கள் முன்னிலையில் இன்று தரமான நடிகர் என பெயரெடுத்து அவர்களை வாயடைக்க செய்துள்ளார் தனுஷ்.

25
Dhanush Birthday

Dhanush Birthday

கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் என கடல் தாண்டி சென்று கலக்கி வருகிறார் தனுஷ். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமாவில் அசுர வளர்ச்சி கண்ட தனுஷ், இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சோசியல் மீடியாக்களில் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், அவரின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றியும் அவருடைய சம்பள விவரம் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

35
Dhanush Net Worth

Dhanush Net Worth

கடந்த 2022ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட தகவலின்படி நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு ரூ.160 கோடியாக இருந்தாலும், அதன்பின் அவரின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டதால் தற்போது அவரின் சொத்து மதிப்பு அசால்டாக ரூ.200 கோடியை தாண்டியிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... நடிப்பு அசுரன் தனுஷ் பற்றி பலரும் அறிந்திடாத டக்கரான தகவல்கள்

45
Dhanush Salary

Dhanush Salary

நடிகர் தனுஷுக்கு சொந்தமாக சென்னையில் உள்ள ரிச்சான ஏரியாவான போயஸ் கார்டனில் ஒரு மாடர்ன் பங்களா உள்ளது. இந்த பக்கம் சூப்பர்ஸ்டார் வீடு, இந்தப்பக்கம் ஜெயலலிதா வீடு என இரு லெஜண்டுகளின் வீட்டுக்கு மத்தியில் தன்னுடைய கனவு இல்லத்தை கட்டி இருக்கிறார் தனுஷ். அந்த வீட்டில் நீச்சல் குளம், ஜிம், தியேட்டர் என சகல வசதியும் உள்ளது. தனுஷின் அந்த ஆடம்பர பங்களாவின் மதிப்பு ரூ.150 கோடி இருக்குமாம். 

55
Dhanush Car Collection

Dhanush Car Collection

நடிகர் தனுஷிடம் ஜாகுவார் XE, ஃபோர்ட் மஸ்டாங்க், பெண்ட்லி, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ஆடி A8, மெர்சிடிஸ் பென்ஸ் S-Class போன்ற சொகுசு கார்கள் உள்ளன. பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் தனுஷ் தன்னுடைய சம்பளத்தையும் படத்துக்கு படம் அதிகரித்த வண்ணம் உள்ளார். லேட்டஸ்ட் தகவலின்படி அவரின் சமீபத்திய ஹிட் படமான ராயனுக்காக ரூ.50 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம். படத் தயாரிப்பிலும் அவர் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்...  பார்க்க தான் ஒல்லி; நடிப்புல கில்லி! தனுஷின் டாப் 10 மூவீஸ்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved