- Home
- Gallery
- ஆட்டத்தை துவங்கும் தேசிங்கு.. சூடுபிடிக்கும் STR 48 - கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் பாலிவுட்டின் இளம் நாயகி?
ஆட்டத்தை துவங்கும் தேசிங்கு.. சூடுபிடிக்கும் STR 48 - கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் பாலிவுட்டின் இளம் நாயகி?
STR 48 Heroine : மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் "தக் லைப்" என்கின்ற திரைப்படத்தில் தற்போது சிம்பு நடித்து வருகின்றார், மேலும் அவருடைய 48வது பட பணிகளும் விரைவில் துவங்க உள்ளன.

simbu
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் "தக் லைப்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிப்பது குறிப்பிடத்தக்கது.
Desingh
இந்நிலையில் "தக் லைஃப்" திரைப்படத்திற்கு முன்பாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது பட பணிகளை மேற்கொண்டு வந்தார் சிம்பு என்பது அனைவரும் அறிந்ததே.
Simbu 48
STR 48 படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார், அதுவும் ஹீரோ மற்றும் வில்லன் என்று இரு கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ள நிலையில் அதற்காக பல சண்டை பயிற்சிகளையும் அவர் வெளிநாட்டில் மேற்கொண்டார்.
Janhvi kapoor
அப்பட பணிகள் இப்பொது பாதியில் நிற்கும் நிலையில், விரைவில் Thug Life பட பணிகளை முடித்துவிட்டு தனது 48வது பட பணிகளை மீண்டும் சிம்பு துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படக்குழு தற்பொழுது பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் அவர்களை இந்த திரைப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.