Indian 2 First Single Promo : அனிரூத் இசையில் இந்தியன் 2 படத்தில் ஒலிக்க உள்ள முதல் சிங்கள் பாடலின் ப்ரோமோ இப்பொது வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் தான் இந்தியன். பல ஆண்டுகள் கழித்து அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்பொழுது எடுத்து முடித்திருக்கிறார் இயக்குனர் சங்கர். மேலும் இந்தியன் 2 திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி உலக அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல எதிர்வரும் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர் அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்நிலையில் நாளை இந்த திரைப்படத்தில் இருந்து "பாரா" என்கின்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகவுள்ள நிலையில் அதன் முன்னோட்டம் ஒன்று தற்பொழுது வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. 

STAR in OTT : தியேட்டரில் சக்க போடு போட்டாச்சு.. அப்போ அடுத்து? விரைவில் OTTக்கு வரும் கவினின் STAR - எப்போது?

முதல் முறையாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அனிருத் இசையமைத்துள்ள நிலையில் இந்த பாரா பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அது குறித்து வெளியான ப்ரோமோ மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. தனது வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இசையை அனிருத் கொடுத்துள்ளார் என்றே கூறலாம். 

Scroll to load tweet…

கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கிய இந்தியன் 2 திரைப்படத்தின் பணிகள் சுமார் 7 ஆண்டுகள் கழித்து தற்பொழுது நிறைவடைந்திருக்கிறது. பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ள பட குழு பல உயர்நக தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த திரைப்படத்தை முடித்து இருக்கின்றனர். அதேபோல மறைந்த நடிகர் விவேக் அவர்களுடைய கதாபாத்திரம் நிச்சயம் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் என்கின்ற தகவலும் ஏற்கனவே வெளியிடப்பட்டது.

"என் கனவு காரை வாங்கிட்டேன்".. நாக சைதன்யா வீட்டை மேலும் அழகாக்கிய Porsche 911 GT3 RS - என்ன விலை இருக்கும்?