Aparna Das: மஞ்சும்மல் பாய்ஸ் நடிகருடன் காதல் திருமணம்! களைகட்டிய பீஸ்ட் நடிகை அபர்ணா தாஸின் ஹல்தி கொண்டாட்டம்
தமிழில் டாடா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை அபர்ணா தாஸின் ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் அபர்ணா தாஸ். கேரளாவை சேர்ந்த இவர் இப்படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தாலும் அவரை ஹீரோயின் ரேஞ்சுக்கு ரசிகர்கள் கொண்டாடினர். குறிப்பாக அப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் பூஜா ஹெக்டேவுக்கு பதில் இவரை ஹீரோயினாக நடிக்க வைத்திருக்கலாம் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது.
அந்த அளவுக்கு பீஸ்ட் படம் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார் அபர்ணா தாஸ். பீஸ்ட் படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்தது. அந்த வகையில் கடந்தாண்டு வெளியான டாடா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் அபர்ணா தாஸ்.
டாடா திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அபர்ணா. இப்படத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆனதால் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. டாடா படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகை அபர்ணா தாஸுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
இதையும் படியுங்கள்... Vishal : என்னது நான் தளபதி ஸ்டைலை Follow பண்றேனா? வாக்களிக்க சைக்கிளில் சென்றது ஏன்? அவரே கொடுத்த பலே பதில்!
டாப் ஹீரோயினாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார் அபர்ணா. அந்த வகையில் அவரும் மலையாள நடிகர் தீபக் பரம்போல் என்பவரும் காதல் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.
அவர்கள் இருவரும் மனோகரம் என்கிற திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது அவர்களிடையே காதல் மலர்ந்தது. நடிகை அபர்ணா தாஸின் காதலர் தீபக் பரம்போல், சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் ஜோடிக்கு நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில், அவர்களின் ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... Anitha Vijayakumar : பிரெண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு! கோலிவுட் தோழிகளுடன் ஜாலியாக வைப் பண்ணிய அனிதா விஜயகுமார்