Anitha Vijayakumar : பிரெண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு! கோலிவுட் தோழிகளுடன் ஜாலியாக வைப் பண்ணிய அனிதா விஜயகுமார்
விஜயகுமாரின் மகள் அனிதா, தன்னுடைய கோலிவுட் தோழிகளான சினேகா, கிகி விஜய், மலர் ஆகியோருடன் சேர்ந்து விருந்துக்கு சென்றிருக்கிறார்.
நடிகர் விஜய்குமாரின் மகள்களில் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்தவர் என்றால் அது அனிதா தான். டாக்டருக்கு படித்த இவர், தன்னுடன் படித்தவரையே காதலித்து திருமணம் செய்துகொண்டு, பின்னர் குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆனார். அனிதா விஜயகுமாருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
அனிதா விஜயகுமாரின் வீட்டில் அவரது கணவர், மகன், மகள் என அனைவருமே மருத்துவர்கள் தான். அனிதா விஜயகுமார் கடந்தாண்டு சென்னையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டி கிரஹப்பிரவேஷம் நடத்தினார். சகல வசதியும் கொண்ட அந்த வீட்டின் மதிப்பு பல கோடி இருக்குமாம்.
வீடு கட்டு முடித்த கையோடு மகளின் திருமணத்தையும் நடத்தி முடித்திருக்கிறார் அனிதா விஜயகுமார். அவரின் மகள் தியாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதையும் படியுங்கள்... கூலி டீம் SRH டாப் ஆர்டர் மாதிரி இருக்கு! படத்தில் இருந்து நீக்கினாலும் பாசத்துடன் லோகேஷை வாழ்த்திய ரத்னகுமார்
அனிதா விஜயகுமார் இன்ஸ்டாகிராமில் செம்ம ஆக்டிவாக உள்ளார். அவருக்கு லட்சக்கணக்கில் பாலோவர்களும் உள்ளனர். அதில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிடும் அவர், அண்மையில் தோழியின் வீட்டில் விருந்துக்கு சென்றபோது அங்கு கோலிவுட் நட்சத்திரங்களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
நடிகை சினேகா, தொகுப்பாளினி கீக்கி விஜய், நடிகர்கள் பிரசன்னா மற்றும் சாந்தனு, இயக்குனர் பாலாவின் முன்னாள் மனைவி மலர் ஆகியோருடன் சேர்ந்து அனிதா விஜயகுமார் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... Aishwarya Rajesh : உச்சகட்ட குஷியில் ஐஸ்வர்யா ராஜேஷ் - அடுத்த படத்தில் "சூப்பர் ஸ்டாருடன்" இணையும் வாய்ப்பு!