சிவகார்த்திகேயன் செஞ்ச துரோகத்தை மறக்கவும் மாட்டேன்.. மன்னிக்கவும் மாட்டேன் - SK மீது கடும் கோபத்தில் டி.இமான்
நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும், அதனால் அவருடன் இனி பணியாற்ற மாட்டேன் என்றும் இசையமைப்பாளர் டி.இமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
D Imman, sivakarthikeyan
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் வந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன். 10 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்ட சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் லிஸ்ட்டிலும் இணைந்துள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த வளர்ச்சிக்கு அவரது படங்கள் எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்ததோ, அதில் இடம்பெற்ற பாடல்கள் ஹிட் ஆனதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களில் பெரும்பாலானவற்றிற்கு அனிருத் அல்லது டி இமான் தான் இசையமைத்து இருப்பார்கள். குறிப்பாக சிவகார்த்திகேயன் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் அவரின் படங்களுக்கு தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து அவரை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்ற பெருமை இசையமைப்பாளர் டி.இமானையே சேரும்.
sivakarthikeyan, D Imman
சிவகார்த்திகேயனுடன் டி.இமான் முதன்முதலில் கூட்டணி அமைத்த திரைப்படம் மனம் கொத்தி பறவை. பின்னர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா என சிவகார்த்திகேயன் - டி.இமான் காம்போவில் வெளிவந்த படங்களின் பாடல்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இந்த காம்போ கடந்த சில ஆண்டுகளாக ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றவில்லை. இதற்கு பின்னணியில் மிகப்பெரிய பிரச்சனை இருப்பது இசையமைப்பாளர் டி.இமானின் சமீபத்திய பேட்டி மூலம் தெரியவந்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
D Imman about sivakarthikeyan betrayal
சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக இமான் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். இதுகுறித்து மேலும் அவர் பேசியதாவது : “இந்த ஜென்மத்துல சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து படம் பண்ணுவது கஷ்டம். சொந்த காரணங்களுக்காக தான் இந்த முடிவு. அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்திருக்கிறார். அதை நான் வெளியே சொல்ல முடியாது. அதனால் வரும் காலங்களில் அவருடன் சேர்ந்து பயணிக்க இயலாது.
அடுத்த ஜென்மத்துல நானும் இசையமைப்பாளரா இருந்து, அவரும் நடிகரா இருந்தா வேணா அது மீண்டும் நடக்கலாம். உங்ககிட்ட இவ்வளவு பாசமா இருந்து, உங்களுடைய படங்களுக்கு ஆத்மார்த்தமாக இசையமைத்துக் கொடுத்த எனக்கு எப்படி துரோகம் சென்ன மனசு வந்துச்சுனு அவரிடமே நேரடியாக கேட்டுவிட்டேன். என் குழந்தைகளுடைய எதிர்காலம் கருதி அதை நான் வெளியில் சொல்ல மாட்டேன்” என அந்த பேட்டியில் தன் மனதில் இருந்த ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார் இமான்.
D Imman sivakarthikeyan controversy
இசையமைப்பாளர் டி.இமானின் இந்த பேட்டியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், சிவகார்த்திகேயன் இப்படியெல்லாம் பண்ணுவாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இசையமைப்பாளர் டி.இமான் தன் முதல் மனைவி மோனிகா ரிச்சர்டை விவாகரத்து செய்ததற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்றும், அதனால் தான் அவர்மீது டி.இமான் இவ்வளவு கோபத்தில் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் என்ன பிரச்சனை என்பதை சிவகார்த்திகேயன் தரப்பிலோ அல்லது டி இமான் தரப்பிலோ சொன்னால் தான் அது வெளிச்சத்துக்கு வரும். தற்போது இந்த விவகாரம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... லியோ தாஸிடம் சரண்டர் ஆன ராக்கி பாய்... ரிலீசுக்கு முன்பே கேஜிஎப் 2 சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய லியோ