தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களா.? நான் யாரு தெரியுமா.. சாம் பிட்ரோடாவுக்கு பதிலடி தந்த அண்ணாமலை..
காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா கூறிய சர்ச்சை கருத்துக்கள் பேசுபொருளாகி உள்ளது. இன்று சாம் பிட்ரோடா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போன்றவர்கள். மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போன்றவர்கள். வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போன்றவர்கள்.
தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போன்றவர்கள். இருப்பினும் நாம் அனைவரும் சகோதரி சகோதர்கள்” என்று கூறினார். இந்தியர்களின் நிறம் குறித்த சாம் பிட்ரோடாவின் கருத்து இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம், வாரங்கல்லில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
தோல் நிறத்தை வைத்து இந்தியர்களை மதிப்பிடுவது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியின் அரசியல் ஆலோசகர் பிட்ரோடாவின் பேச்சு எனக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்றும் பிரதமர் மோடி கூறினார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “அன்புள்ள சாம் பிட்ரோடா, நான் ஒரு கருமையான பாரதி” என்று பதிலடி கொடுக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.
மேலும் சாம் பிட்ரோடாவின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசினார். அதில், “காங்கிரஸின் மனநிலையும் சிந்தனையும் இந்தியாவை நாடு என்று நம்புகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் நாங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் வழித்தோன்றல்கள். அதனால்தான் இது ஒரு ஆப்பிரிக்க அல்லது சீனர்களைப் போல தோற்றமளிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று அவர் குறிப்பிடுகிறார்.
நாட்டிற்கு வெளியே எஜமானர்களை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நம்மை ஆக்கிரமிப்பாளர்களின் வழித்தோன்றல்கள் என்று சொல்லும் அளவிற்கு செல்ல முடியும் காங்கிரஸின் மனநிலையை காட்டுகிறது, அதனால்தான் காங்கிரஸ்-முக்த் பாரதம் வேண்டும் என்று நமது பிரதமர் கூறுகிறார்” என்று கூறியுள்ளார் அண்ணாமலை.