லியோ தாஸிடம் சரண்டர் ஆன ராக்கி பாய்... ரிலீசுக்கு முன்பே கேஜிஎப் 2 சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய லியோ
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் முன்பதிவிலேயே யாஷின் கேஜிஎப் 2 பட சாதனையை முறியடித்து மாஸ் காட்டி உள்ளது.
Leo beats KGF 2
நடிகர் விஜய்யின் லியோ படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், அப்படத்திற்கான முன்பதிவு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. லியோ படத்துக்கான முன்பதிவு வெளிநாட்டில் கடந்த மாதமே தொடங்கிவிட்டாலும் இந்தியாவில் சில தினங்களுக்கு முன்னர் தான் தொடங்கியது. முன்பதிவு ஆரம்பமானதும் டிக்கெட்டுகள் சரசரவென விற்றுத்தீர்ந்து வருகின்றன. இதனால் லியோ படத்திற்கான காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்புல் ஆகிய வண்ணம் உள்ளன.
Leo vijay
நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். கர்நாடகாவில் விஜய்யின் லியோ படத்துக்கு போட்டியாக கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவராஜ்குமார் நடித்த கோஸ்ட் திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் அப்படத்தை விட லியோ படத்துக்கு தான் அங்கு அதிகளவில் டிக்கெட் முன்பதிவு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
trisha, vijay
அதேநிலை தான் கேரளாவிலும் உள்ளது. கேரளா விஜய்யின் கோட்டையாக கருதப்படுகிறது. அங்கு நேரடி மலையாள படத்துக்கு நிகராக லியோ படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் கேரளாவிலும் லியோ படத்தின் முன்பதிவு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முன்பதிவு மூலமே தற்போது மாஸான சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறது லியோ திரைப்படம். இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Leo breaks KGF 2 record in kerala
கேரளாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்கிற பெருமையை யாஷ் நடித்த கேஜிஎப் 2 திரைப்படம் பெற்று இருந்தது. அப்படம் முதல்நாளில் ரூ.7.25 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது லியோ திரைப்படம் ரிலீசுக்கு முன்பே முறியடித்து உள்ளது. இப்படத்திற்கான முதல்நாள் முன்பதிவு தொகை மட்டும் ரூ.7.4 கோடிக்கு மேல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் கேரளாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற மாபெரும் சாதனையை லியோ படைக்க உள்ளது. லியோ மூலம் கேரளா தன்னுடைய கோட்டை என விஜய் மீண்டும் நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் கெத்தாக பதிவிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை அனுமதி கிடைக்காத போதிலும், லியோ திரைப்படத்திற்கு கேரளாவில் அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ரிலீசுக்கு முன்பே பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்கும் லியோ... ப்ரீ புக்கிங்கில் மட்டும் இத்தனை கோடி கலெக்ஷனா?