சி.வி.சண்முகத்தின் பேச்சு ஏத்துக்கவே முடியாது! நீதிபதி கேட்ட ஒற்றை கேள்வி! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
தமிழக முதல்வர் குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது மோசமானது. அவரது பேச்சை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவும் இல்லை என நீதிபதி கூறியுள்ளார்.
CV Shanmugam
கடந்த 20233ம் ஆண்டு திண்டிவனத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக திண்டிவனம் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
Defamation Case
இந்த வழக்குகள் விழுப்புரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தன. இந்நிலையில் இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகத்தின் பேச்சு காரணமாக சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அரசு தான் புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால் இந்த புகார் திமுக நிர்வாகியால் அளிக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.
இதையும் படிங்க: School College Holiday: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! நாளை விடுமுறை! வெளியான அறிவிப்பு!
Chennai High Court
அப்போது குறுக்கிட்ட நீதிபதி மனுதாரரின் பேச்சு மோசமானது தான். அவரது பேச்சை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதேசமயம் இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியுமா? என காவல்துறைக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ஆபாச படம் பார்ப்பவர்கள் கவனத்திற்கு.. உஷார்! முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு சொன்ன அதிர்ச்சி தகவல்!
CV Shanmugam Vs MK Stalin
அதற்கு காவல் துறை தரப்பில்: சி.வி.சண்முகத்தின் பேச்சு அரசியலில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி, அதன்மூலம் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதாலேயே, அந்தப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேறு பிரிவு ஏதேனும் பொருந்தும் என்றால் அந்த பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சி.வி.சண்முகம் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக விஏஓ உள்ளிட்ட 4 பேர் புகார் அளித்துள்ளனர். அதில் ஒரு வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.