ஆபாச படம் பார்ப்பவர்கள் கவனத்திற்கு.. உஷார்! முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு சொன்ன அதிர்ச்சி தகவல்!
புதிதாக கிளம்பி கொண்டிருக்கும் சைபர் கிரைம் மோசடி குறித்து விளக்கம் தந்தள்ளார் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sylendra Babu Awareness Video
தற்போதைய நவீன காலத்தில் அனைத்து விஷயங்களும் இணையத்தால் தான் சுழன்றுகொண்டிருக்கிறது என்று நிச்சயம் சொல்லலாம். அந்த அளவுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்டர்நெட் எனும் இணையத்தின் அடிமையாக இருக்கிறார்கள். கத்தி மேல் நாட்டு போல இணையம் என்ற சேவை எந்த அளவுக்கு மனித வாழ்வுக்கு நன்மை அளிக்கிறதோ அதே அளவிலான தீமைகளையும் கொடுக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
Sylendra Babu
இணையத்தில் உள்ள ஆபாச படங்கள் பார்த்து பலரும் திசை மாறி சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஆபாச படங்கள் தொடர்பான குற்றத்தை பற்றி தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். சைபர் குற்றவாளிகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தற்போது தமிழக மக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சமீபத்தில் மெயில் மூலமாக ஒரு மோசடி நடைபெற்று வருகிறது.
Cybercrime Scam
அதன்படி, உங்கள் கம்பியூட்டரை பயன்படுத்தி, குழந்தைகள் சம்பந்தமான ஆபாச படத்தை பார்த்திருக்கிறீர்கள். சிபிஐ இதனை கண்டறிந்துள்ளது. டெல்லி போலீஸ் உங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்தியாவின் உளவு அமைப்பான ரா உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறது. எனவே நீங்கள் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மெயில் வரும். உங்களது தனிப்பட்ட மெயில் முகவரிக்கோ அல்லது ஆஃபிஸ் மெயில் முகவரிக்கோ இதுபோன்ற மெயில்கள் வரலாம்.
Former DGP Sylendra Babu
இது போன்ற மெயில்களை நீங்கள் கண்டுகொள்ள தேவையில்லை. அதேபோல இதுபோன்ற மெசேஜ்கள் வாட்ஸ்அப்பிலும் வர வாய்ப்புண்டு. எனவே இதுபோன்ற மெயில் அல்லது குறுந்செய்திக்கு பதில் அளிக்காமல் விலகி இருங்கள். இதற்கு பதில் அளிக்காதீர்கள் என்றும் அறிவுறுத்தி உள்ளார் சைலேந்திர பாபு. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.295 காணாம போகுதா? அதற்கு இதுதான் காரணம்!