School College Holiday: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! நாளை விடுமுறை! வெளியான அறிவிப்பு!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு 7-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Srivilliputhur Aandal Chariot Festival
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு ஆண்டாளின் அவதார நாளான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் திருவிழா விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா அண்மையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Virudhunagar District Local Holiday
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த தேரோட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்பர். இதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
School Holiday
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீ அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் பிரச்சித்திப் பெற்ற பிரார்த்தனை திருத்தலமாகும். இத்திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இவ்விழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிது. இம்மாதம் 7-ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.
School Working Day
நாளை புதன்கிழமை அன்று திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நாளை விருதுநகர் மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக இம்மாதம் 3வது சனிக்கிழமையான 17-ம் தேதியன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.