சினிமா.. ஈவென்ட் மேனேஜிங்.. பிராண்டிங்.. பல வகையில் வரும் பணம் - கோடீஸ்வரி ஐஸ்வர்யா ராயின் Net Worth எவ்வளவு?
Aishwarya Rai Bachchan Net Worth : கடந்த 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்றதற்கு பிறகு இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார் ஐஸ்வர்யா ராய் என்றால் அது மிகையல்ல. பல சூப்பர் ஹிட் பாலிவுட் நடிகைகளை போலவே இவரும் தனது கலைப் பயணத்தை தமிழ் மொழியில் இருந்து தான் துவங்கினார்.
Aishwarya Rai
கடந்த 1997 ஆம் ஆண்டு தமிழில் வெளியான மணிரத்தினம் அவர்களின் "இருவர்" திரைப்படத்தின் மூலம் தன் கலை உலக பயணத்தை துவங்கினார் ஐஸ்வர்யா ராய். இன்று இந்திய அளவில் மிகப்பெரிய நடிகையாகவும் தொழிலதிபராகவும் திகழ்ந்துவரும் இவர் குறித்து இந்த பதிவில் காணலாம்
பிராண்டிங்
கேட்பரீஸ், லாக்மீ, டைட்டன் வாட்சஸ், லோரியல் பாரிஸ், கோகோ கோலா, லக்ஸ், கல்யாண் ஜுவல்லரி மற்றும் பிலிப்ஸ் என்று பல முன்னணி நிறுவனங்களுக்கு பிராண்ட் மாடலாக இவர் திகழ்ந்து வருகிறார். இந்த விளம்பர திரைப்படங்களில் நடிப்பதற்காக ஒரு நாளுக்கு சுமார் 6 முதல் 7 கோடி ரூபாயை ஐஸ்வர்யா ராய் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Actress Aishwaya
வணிகங்களில் முதலீடுகள்
எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, ஐஸ்வர்யா ராய் பச்சன் 2021 ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து அடிப்படையிலான ஹெல்த்கேர் நிறுவனமான "பாசிபிள்" இல் மூலோபாய ரீதியாக முதலீடு செய்துள்ளாராம். அவரது முதலீடு நிறுவனத்தின் பெரிய நிதிச் சுற்றுக்கு சுமார் 5 கோடி ரூபாய் பங்களித்ததாக அறிக்கை விவரிக்கிறது.
Actress Aishwaya Rai
பட தயாரிப்பு மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட்
அமிதாப்பச்சன் கடந்த 1994 ஆம் ஆண்டு ஏபிசிஎல் என்கின்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். தற்பொழுது அந்த நிறுவனத்தின் பணிகளை ஐஸ்வர்யா தான் கவனித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பெரிய பெரிய நிகழ்வுகளை நடத்தும் நிறுவனம் ஒன்றையும் ஐஸ்வர்யா ராய் தன்வசம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
Actress Aishwaya Rai Bachchan
திரைப்படம்
கடந்த நவம்பர் 1ம் தேதி தனது 50 வது வயதை எட்டிய ஐஸ்வர்யா ராய் தற்போது வரை தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் முதல் 12 கோடி ரூபாய் வரை அவர் சம்பளம் பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அவருடைய சொத்து மதிப்பு சுமார் 776 கோடி என்று கூறப்படுகிறது.