MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஓபனிங் நல்லா இருந்தாலும் பினிஷிங்கில் தடுமாறிய சிஎஸ்கே: துபே, தோனி கோல்டன் டக்: 167/9 ரன்கள் எடுத்த சிஎஸ்கே!

ஓபனிங் நல்லா இருந்தாலும் பினிஷிங்கில் தடுமாறிய சிஎஸ்கே: துபே, தோனி கோல்டன் டக்: 167/9 ரன்கள் எடுத்த சிஎஸ்கே!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 53ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 05 2024, 05:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match

Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 53ஆவது லீக் போட்டி தற்போது தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது.

28
Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match

Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match

சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ரஹானே 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த டேரில் மிட்செல் மற்றும் கெய்க்வாட் இருவரும் ஓரளவு தாக்குபிடித்து ரன்கள் எடுத்தனர். எனினும் கெய்க்வாட் 32 ரன்களில் ராகுல் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே ஆறுச்சாமி ஷிவம் துபே கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.

38
Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match

Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match

இதே போன்று மிட்செல் 30 ரன்கள் எடுத்த நிலையில், ஹர்ஷல் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். மொயீன் அலி 17, மிட்செல் சான்ட்னர் 11, ஷர்துல் தாக்கூர் 17 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

48
Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match

Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match

கடைசியாக வந்த தோனி கோல்டன் டக் முறையில் ஹர்ஷல் படேல் பந்தில் கிளீன் போல்டானார். இறுதியாக கடைசி ஓவரில் ரவீந்திர ஜடேஜா தனது விக்கெட்டை இழந்தார். அவர் 26 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.

58
Punjab Kings vs Chennai Super Kings, 53rd IPL 2024 Match

Punjab Kings vs Chennai Super Kings, 53rd IPL 2024 Match

இறுதியாக ரிச்சர்டு கிளீசன் 2 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 167 ரன்கள் எடுத்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் பஞ்சாப் அணியில் ராகுல் சாஹர் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், சாம் கரண் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

68
Punjab Kings vs Chennai Super Kings

Punjab Kings vs Chennai Super Kings

பஞ்சாப் கிங்ஸ்:

ஜானி பேர்ஸ்டோவ், ரிலீ ரோஸோவ், ஷஷாங்க் சிங், சாம் கரண் (கேப்டன்), ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அஷுதோஷ் சர்மா, ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், கஜிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), மிட்செல் சாண்ட்னர், ஷர்துல் தாக்கூர், ரிச்சர்டு கிளீசன், துஷார் தேஷ்பாண்டே.

78
Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match

Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match

இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 29 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் 13 போட்டியிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 15 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. தரம்சாலாவில் நடைபெற்ற 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக தரம்சாலாவில் நடைபெற்ற 11 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் 5ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்துள்ளது.

88
PBKS vs CSK 53rd IPL 2024

PBKS vs CSK 53rd IPL 2024

இந்த சீசனில் இதுவரையில் விளையாடிய 10 போட்டிகளில் சிஎஸ்கே 5 போட்டியில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 10 போட்டிகளில் 4ல் வெற்றியும், 6ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அஜிங்க்யா ரஹானே
சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ்
எம். எஸ். தோனி
PBKS vs CSK
பஞ்சாப் கிங்ஸ்
ருதுராஜ் கெய்க்வாட்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved