Power Shutdown in Chennai: சென்னையில் இன்று 5 மணிநேரம் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்திரா நகர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இந்திரா நகர்:
சின்னமலை, கோட்டூர்புரம், காந்திமண்டபம் சாலை, ரஞ்சித் சாலை & எல்டிஜி சாலை, சர்தார் படேல் சாலை, கோட்டூர்புரம் (முழு பகுதி), ஸ்ரீ நகர் காலனி, வெங்கடாபுரம், தாமஸ் நகர், சின்னமலை, ஆரோக்கியமாதா தெரு, பிஷப் காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
திருவொற்றியூர்:
எஸ்.பி கோவில் தெரு, பெரியார் நகர், நேதாஜி நகர், கே.வி குப்பம், ராஜீவ் காந்தி நகர், மாணிக்கம் நகர், சி.எம்.ஆர்.எல்., சின்ன எர்ணாவூர், விம்கோ நகர், சன்னதி தெரு, அம்பேத்கர் நகர், அண்ணாமலை நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அடையார்:
ஐஐடி காந்திமண்டபம் சாலை, ரஞ்சித் சாலை, எல்டிஜி சாலை, சர்தார் படேல் சாலை, கோட்டூர்புரம், ஸ்ரீ நகர் காலனி, வெங்கடாபுரம், இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
பல்லாவரம்:
மேக்ஸ், மசூதி தெரு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, மீனாட்சி நகர், கஸ்தூரிபாய் தெரு, மாரியம்மன் கோவில் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.