MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பாலா இயக்கத்தில் பாலய்யாவா! ஒய் திஸ் கொலவெறி பாஸ்? பற்ற வைத்த பிரபலம்... பதறிப்போன ரசிகர்கள்

பாலா இயக்கத்தில் பாலய்யாவா! ஒய் திஸ் கொலவெறி பாஸ்? பற்ற வைத்த பிரபலம்... பதறிப்போன ரசிகர்கள்

இயக்குனர் பாலா படப்பிடிப்பு தளத்தில் நடிகையை அடித்ததாக சர்ச்சை வெடித்த நிலையில், ப்ளூ சட்டை மாறன் அதுகுறித்து ஒரு மீம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 02 2024, 09:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
director bala, Balakrishna

director bala, Balakrishna

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அவர் இயக்கத்தில் தற்போது வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் முதலில் சூர்யா ஹீரோவாக நடிக்க இருந்தார். பின்னர் அவர் விலகியதை அடுத்து அவருக்கு பதில் அருண் விஜய்யை ஹீரோவாக நடிக்க வைத்து அப்படத்தை எடுத்து முடித்துள்ளார் பாலா. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

24
director bala

director bala

இதனிடையே வணங்கான் படத்தில் நடித்தபோது இயக்குனர் பாலா அடித்ததால் நடிகை மமிதா பிஜூ அப்படத்தை விட்டு விலகியதாக கூறி சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அந்த நடிகையே இதுகுறித்து விளக்கம் அளித்தார். பாலா தன்னை அடிக்கவில்லை என்றும் அவர் மிகவும் பண்பானவர் எனவும் கூறி இருந்தார். பாலா நடிகையை தாக்கியதாக செய்திகள் பரவியதை பார்த்த ப்ளூ சட்டை மாறன், ஒரு வேறலெவல் மீம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... திரையரங்குகளை கலக்கும் Manjummel Boys.. நேரில் அழைத்து வாழ்த்தும் கோலிவுட் ஜாம்பவான்கள் - லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

34
blue sattai maaran

blue sattai maaran

அந்த மீமில் இயக்குனர் பாலா தெலுங்கு நடிகர் பாலய்யா நடிக்கும் படத்தை இயக்கினால் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், நிஜமாவே இது வேறலெவல் காம்போவா இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ, அப்படத்தில் சிவக்குமாரை தந்தை ரோலில் நடிக்க வைக்க வேண்டும் என்றும், மன்சூர் அலிகானை வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என்றும் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

44
blue sattai maaran X Post

blue sattai maaran X Post

மேலும் சிலர் இப்படி ஒரு படம் மட்டும் உருவானால், பாலாவோ அல்லது பாலய்யாவோ இருவரில் ஒருவர் நிச்சயம் ஐசியூவில் தான் இருப்பார் என்று கிண்டலடித்து வருகின்றனர். ஒரு சிலரோ, இது நல்ல காம்போ தான், படம் ரிலீஸ் ஆகி அப்டேட் வருகிறதோ இல்லையோ, நியூஸ் பேப்பர்ல நியூஸ் கண்டிப்பா வரும் என கலாய்த்து வருகின்றனர். ப்ளு சட்டை மாறனின் இந்த பதிவு எக்ஸ் தளத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... களைகட்டிய அம்பானி வீட்டு திருமணம்.. குஜராத்திற்கு படையெடுத்த பாலிவுட், சர்வதேச பிரபலங்கள்..

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாலகிருஷ்ணா
இயக்குநர் பாலா
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved