என் மூஞ்சிலயே குத்திட்டு தப்பி ஓடிட்டான்; வெறித்தனமாக தாக்கிய பிரதீப் ரசிகர்.. வலியால் துடிதுடித்துப்போன வனிதா
பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்ததை வரவேற்று பேசியதால் அவரின் ரசிகர் தன்னை நடுரோட்டில் வைத்து தாக்கியதாக வனிதா விஜயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.
vanitha
நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் வனிதாவின் மகள் ஜோவிகா போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகை வனிதா ரிவ்யூ செய்யும் ஷோ ஒன்று தினமும் பிரபல யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்றது.
Pradeep, Vanitha
அதில் தினசரி நடக்கும் நிகழ்வுகளை குறிப்பிட்டு பேசி வருகிறார் வனிதா. அந்த வகையில் இந்த சீசனில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது பிரதீப்பின் ரெட் கார்டு விவகாரம் தான். அதனை வனிதா ரிவ்யூ செய்தபோது ரெட் கார்டு கொடுத்தது சரி தான் என பேசி இருந்தார். இதற்கு பிரதீப் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அது நடந்து 2, 3 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், நேற்று நள்ளிரவு நடிகை வனிதா விஜயகுமாரை மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
vanitha X post
பிரதீப் ரசிகர் தான் தன்னை தாக்கிவிட்டதாக கூறி நடிகை வனிதா விஜயகுமார் தனது எக்ஸ் தளத்தில் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், என்னை கொடூரமாக தாக்கியது யார் என்று கடவுளுக்கு தெரியும். நான் பிக்பாஸ் ரிவ்யூ முடித்து என்னுடைய தங்கை செளமியா வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, காரை எடுக்க பார்க்கிங் வந்தபோது, ஒரு நபர் திடீரென வந்து ‘ரெட் கொடுக்குறீங்களா... நீ சப்போர்ட் வேற’ என சொல்லி என் முகத்திலேயே ஓங்கி குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டான்.
vanitha Injured
செம்ம வலி.. என் முகத்தில் ரத்தம் கொட்டியது. அந்நேரம் இரவு 1 மணி இருக்கும், அருகே யாருமே இல்லை. பின்னர் என்னுடைய தங்கையை இறங்கி வரச் சொன்னேன். அவள் என்னை போலீசில் புகார் அளிக்க சொன்னால். ஆனால் நான் அதில் நம்பிக்கை இல்லை என கூறிவிட்டேன். பின்னர் முதலுதவி செய்துவிட்டு, அவன் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லையே என்கிற ஆத்திரத்திரத்துடன் வீட்டுக்கு கிளம்பினேன். அவன் பைத்தியக்காரத்தனமாக சிரித்தது என் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது இருக்கும் நிலையில், என்னால் வீடியோவில் தோன்ற முடியாது. இதுபோன்ற மனிதர்களை ஆதரிப்பவர்களுக்கு ஆபத்து மிகவும் அருகே உள்ளது என ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார் வனிதா. அதுமட்டுமின்றி தன் முகத்தில் ஏற்பட்ட காயத்தை போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அந்த நபரின் செயலை கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அவ்ளோ தான் உனக்கு லிமிட்டு... ஆழ்வார்பேட்டை ஆண்டவராக மாறி பூர்ணிமாவுக்கு செம்ம டோஸ் கொடுத்த கமல்