Vanitha: அச்சச்சோ... சமந்தாவை போல் அரியவகை நோயால் அவதிப்படும் வனிதா விஜயகுமார்! அவரே கூறிய அதிர்ச்சி தகவல்!
சர்ச்சை நாயகி வனிதா விஜயகுமாருக்கு உள்ள அரிய வகை நோய் குறித்து அவர் கூறியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நடிகை சமந்தா தன்னுடைய மயோசிட்டிஸ் பிரச்சனை குறித்து, வெளிப்படையாக அறிவித்த பின்னர், அடுத்தடுத்து பல நடிகைகள் தங்களுக்கு உள்ள அரிய வகை நோய்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து.. வெளிப்படையாக பேச துவங்கியுள்ளனர். அந்த வகையில் பிக்பாஸ் மூலம் தன்னுடைய செகண்ட் இன்னிங்சை துவங்கிய வனிதா விஜயகுமாரும் தனக்கு உள்ள அரியவகை பிரச்சனை குறித்து பேட்டி ஒன்றியில் கூறியுள்ளார்.
கடந்த ஒரே வருடத்தில் மட்டும் பல நடிகைகள், தங்கள் உடல்ரீதியான பிரச்சனை குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில், தமிழில் நெஞ்சிருக்கும் வரை, படத்தில் அறிமுகமாக முதல் படத்திலேயே பிரபலமான பூனம் கவுர் ஃபைப்ரோமயால்ஜியா என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டதாக கூறினார்.
இவரைத் தொடர்ந்து கோ, சட்டம் ஒரு இருட்டறை, நெருங்கி வா முத்தமிடாதே, போன்ற படங்களில் நடித்த பியா பாஜ்பாய் தானும் மயோசிட்டிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாகவே பல படங்களில் நடிக்க முடியாமல் போனதை தெரிவித்தார். சமீபத்தில் கூட நடிகை மம்தா மோகன் தாஸ் தன்னுடைய தோல் நிறம் மாறி வருவதாகவும் , அரியவகை நிறமி குறைபாட்டால் பாதிக்கப்பட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.
இவர்களின் வரிசையில் தான் நடிகை வனிதா விஜயகுமாரும் தன்னுடைய பிரச்சனை குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அண்மையில் பேட்டி ஒன்றில், பேசி இருந்த வனிதா விஜயகுமார், கிளாஸ்ட்ரோஃபோபியா என்கிற நோய் பாதிப்பு தனக்கு பல வருடங்களாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனையால், சிறிய இடங்களிலோ அல்லது பாத்ரூம், லிப்ட் போன்ற இடங்களில் தன்னால் அதிக நேரம் இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.