MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தீயாய் பரவிய பிக்பாஸ் அபிராமியின் நிர்வாண வீடியோ! பாலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் புயலை கிளப்பிய Deep Fake

தீயாய் பரவிய பிக்பாஸ் அபிராமியின் நிர்வாண வீடியோ! பாலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் புயலை கிளப்பிய Deep Fake

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாசலத்தின் Deep Fake வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருவது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 30 2024, 10:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் எந்த அளவுக்கு நன்மை இருக்கிறதோ, அதே அளவு அதில் தீமையும் இருக்கிறது. அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு தான் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஈஸியாக போலிகளை உருவாக்கி விட முடியும். ஆரம்பத்தில் இதனை வைத்து சினிமா பாடல்களை மோடியின் குரலில் ஒலிக்கவிட்டு வைரலாக்கினர். பின்னர் வயதான நடிகர்களை இளமை தோற்றத்தில் காட்டி அசர வைத்தனர்.

26

சமீபத்தில் கூட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகும் ஹமீது ஆகியோரின் குரல்களை AI உதவியுடன் மீண்டும் கொண்டுவந்து தனது இசையில் உருவான லால் சலாம் படத்தில் இடம்பெறும் திமிறி எழுடா என்கிற பாடலுக்காக பயன்படுத்தி உள்ளார். அதேபோல் மலையாளத்தில் AI பயன்படுத்த நடிகர் மம்முட்டியை 30 வயது வாலிபன் தோற்றத்தில் ஒரு படத்தில் காட்ட உள்ளனர். இப்படி சினிமாவில் AI மூலம் சில மேஜிக்கை நிகழ்த்தி வருகின்றனர்.

36

அதேவேளையில், மறுபுறம் இந்த AI பயன்படுத்தி சிலர் டீப் ஃபேக் வீடியோக்களை உருவாக்கி அதனை இணையத்தில் பரப்பிவிடுகின்றனர். அதன்படி நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், ஆலியா பட் என பாலிவுட் நடிகைகளை வைத்து தொடர்ந்து டீப் ஃபேக் வீடியோக்கள் உருவாக்கப்பட்டு அதனை வைரலாக்கினர். பாலிவுட்டில் புயலை கிளப்பிய இந்த டீப் ஃபேக் வீடியோ விவகாரம் தற்போது கோலிவுட்டிற்கும் தலைவலியாக மாறி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... மைனஸ் டிகிரி குளிரில் மண்டியிட்டு புரபோஸ் செய்த நடிகர்... காதலை ஏற்று திருமணத்துக்கு ஓகே சொன்ன எமி ஜாக்சன்

46

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை அபிராமி வெங்கடாசலத்தின் நிர்வாண வீடியோ எனக்கூறி டீப் ஃபேக் வீடியோ ஒன்றை இணையத்தில் பரவ விட்டுள்ளனர். இந்த விவகாரம் அபிராமியின் கவனத்துக்கு சென்றதை அடுத்து அவர் இதுகுறித்து நீண்ட பதிவு ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

56

அதில் அவர் கூறியிருப்பதாவது : “என் வாழ்க்கையில் நான் சந்தித்த மோசமான மனிதர்களுக்கு கூட இப்படி ஒன்று நடக்ககூடாது. சமீபகாலமாக டீப் ஃபேக் மிகவும் பிரபலமாகி வருவது மிகுந்த வருத்தமளிக்கிறது. இதன்மூலம் யார் வேண்டுமானாலும் நம்மை மோசமாக காட்டலாம் என்பது பயமுறுத்துகிறது. நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் இதை உருவாக்கியவன் குற்றவாளி, ஆனால் அதை பகிர்ந்து இன்பம் அனுபவிப்பவன் அதைவிட பெரிய குற்றவாளி.

66

கவலை வேண்டாம் அவர்களுக்கு இந்த பிரபஞ்சம் தக்க பாடத்தை கற்றுக்கொடுக்கும். நான் தைரியமான பெண், எனது வலிமையை யாராலும் தகர்க்க முடியாது. தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதை தவிர மற்ற எல்லாவிதமான கீழ்தரமான வேலைகளும் இங்கு நடக்கிறது. பெண்களின் டீப் ஃபேக் வீடியோவை பார்ப்பதில் என்ன சந்தோஷம் கிடைக்கிறது என தெரியவில்லை. நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இதுபோன்ற மற்ற பெண்கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே தற்போது நான் பேசுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கவும் அபிராமி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுடன் கைகோர்க்கும் KGF யாஷ்? எல்லாம் ஓ.கே... ஆனா ஒரே ஒரு சிக்கல்..

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved