- Home
- Gallery
- Bigg Boss Archana Mark: செம்ம படிப்ஸ் போலவே பிக்பாஸ் அர்ச்சனா..! 10th மற்றும் 12th மார்க் எவ்வளவு தெரியுமா?
Bigg Boss Archana Mark: செம்ம படிப்ஸ் போலவே பிக்பாஸ் அர்ச்சனா..! 10th மற்றும் 12th மார்க் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் அர்ச்சனாவின் 10-வது மற்றும் 12-வது மதிப்பெண் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்றைய தினம், ஃபைனலிஸ்ட்டில் ஒருவராக இருப்பார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மூத்த நடிகை, விசித்ரா வெளியேறியுள்ளார். இவரின் வெளியேற்றம் பலரால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கும் நிலையில், உண்மையில் ஓட்டிங் மூலம் தான் எவிக்ஷன் நடக்கிறதா என்கிற கேள்விகளையும் பிக்பாஸ் ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.
விசித்ரா வெளியேறிவிட்டதால், அடுத்து யார் வெளியேறுவார்... ஃபைனலுக்குள் நுழையும் போட்டியாளர்கள் யார் யார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதே போல் ரசிகர்கள் பலர், அர்ச்சனா தான் இந்த சீசனில் டைட்டில் வின்னர் என கூறி வருவதையும் பார்க்க முடிகிறது.
அர்ச்சனா பற்றி தற்போது சமூக வலைத்தளத்தில் பல... தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், அர்ச்சனாவின் மதிப்பெண் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் குறித்த தகவல் வெளியாகி பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
அர்ச்சனாவின் தந்தை ஒரு தமிழ் பேராசிரியர் என்பதால்.. சிறு வயதில் இருந்தே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தன்னுடைய மகளுக்கு சொல்லி கொடுத்து வளர்த்தவர். அதே போல் தன்னுடைய மகளுக்கு தமிழ் தான் முதன்மை மொழியாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். அர்ச்சனாவும் நன்கு படிப்பவர். இவர் 10 ஆம் வகுப்பில், 500-க்கு 491 மதிப்பெண் பெற்றிருக்கிறார்.
அதாவது தமிழில் 97 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும், கணிதத்தில் 100க்கு 100 மதிப்பெண்களும், அறிவியலில் 97 மதிப்பெண்களும், சமூக அறிவியல் பாடத்தில் 98 மதிப்பெண்களும் ஆக மொத்தம் 491 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.
அதுபோல 12 ஆம் வகுப்பில், அறிவியல் குரூப் எடுத்து இருக்கிறார். இதில் தமிழில் 185 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 177 மதிப்பெண்களும், இயற்பியலில் 146 மதிப்பெண்களும், வேதியியலில் 155 மதிப்பெண்களும், தாவரவியலில் 156 மதிப்பெண்களும் மற்றும் கணிதவியலில் 156 மதிப்பெண்களும் ஆக மொத்தம் 1200 மதிப்பெண்களுக்கு 1005 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.இவரின் மார்க் லிஸ்ட் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
BB Tamil 7
அர்ச்சனாவுக்கு நடிப்பு மீது இருந்த ஆர்வம் காரணமாக, ஆதித்யா தொலைக்காட்சியின் மூலம் விஜேவாக அறிமுகம் ஆனார். அதன் பின்னர், நடிகர் கலையரசனின் மனைவி நடத்தும் ஜவுளி கடைக்கு சென்ற போது கலையரசனை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். அந்த புகைப்படத்தின் மூலம் தான் அர்ச்சனாவுக்கு ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் வில்லியாக நடித்த அர்ச்சனா, தற்போது திரையுலக வாய்ப்புக்காக காத்திருக்கும் அர்ச்சனா, வாய்ப்பு தேடும் விதமாகவே பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்து ஃபைனல் உள்ளே செல்லும் அளவுக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.